ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள சிறந்த டி20ஐ அணி – முக்கிய இந்திய வீரரை தேர்ந்தெடுக்க தவறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி

0
120
Harbhajan Singh

இந்திய அணி தற்போது உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் மோசமாக தோற்றாலும் அடுத்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து இன்னமும் அரையிறுதி போட்டிகளுக்கான வாய்ப்பை இந்திய அணி தக்க வைத்துள்ளது. வரவிருக்கும் போட்டியில் வெற்றி பெற்று அதே நேரத்தில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு உறுதி ஆகும். அதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சீனியர் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தன்னுடைய சிறந்த டி20 அணியை வெளியிட்டுள்ளார். ஒரு பிரபல வலைதளத்தில் தன்னுடைய சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஹர்பஜன் தன்னுடைய அணுகி துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் கெயில் என இருவரை தேர்ந்தெடுத்துள்ளார். இந்திய அணியின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவரான ரோஹித்தும் டி20 போட்டிகளில் உலகத்திலேயே சிறந்த துவக்க வீரராக வலம் வந்த கிறிஸ் கெய்லும் இந்த அணியின் துவக்க வீரர்கள்.

- Advertisement -

மிடில் ஆர்டரில் மிகவும் அதிரடியான வீரர்களை ஹர்பஜன் தேர்வு செய்துள்ளார். இந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர்களாக பட்லர், டிவிலியர்ஸ் மற்றும் தோனி செயல்பட உள்ளனர். பட்லர் மற்றும் டிவிலியர்ஸ் எப்பேர்பட்ட பந்து வீச்சாளர்களையும் நொடிப்பொழுதில் அடித்து நொறுக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள். இந்த அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக தோனி செயல்பட உள்ளார்.

டி20 அணியின் தரமே அந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர்களை பொருத்துத்தான் அமையும் என்பதற்கு ஏற்ப ஹர்பஜன் 4 ஆல்ரவுண்டர்களை தனது அணியில் தேர்வு செய்துள்ளார். வாட்சன், பொல்லார்டு, நரேன் மற்றும் பிராவோ என நான்கு உலகத்தர ஆல்ரவுண்டர் இவரது அணியில் உள்ளனர். பந்து வீச்சை பெரிதாக ஆல்ரவுண்டர் கவனித்துக் கொள்வார்கள் என்பதால் இரண்டே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன். அவர்கள் லசித் மலிங்க மற்றும் பும்ரா ஆவர்.

ஹர்பஜனின் சிறந்த டி20 அணி

ரோகித், கெயில், பட்லர், வாட்சன், டிவில்லியர்ஸ், தோனி, பொல்லார்டு, பிராவோ, நரைன், மலிங்கா மற்றும் பும்ரா.

- Advertisement -