“என் ஜூனியர் விராட் கோலிதான் என்னுடைய குரு” – சீனியர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட அசத்தல் தகவல்

0
84
Virat

விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை முழுவதுமாக மாற்றி அமைத்த கேப்டன் என்று தாராளமாக கூறலாம். வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் போட்டி வெற்றிக்கு தடுமாறிய இந்திய அணியை, டெஸ்ட் தொடரையும் வெல்லும் அளவுக்குமாற்றியவர் விராட் கோலி.

விராட் கோலி எப்பொழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டை வெற்றியை நோக்கி விளையாடுவதும், அதை ஆக்ரோஷமான முறையில் விளையாடுவதும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் எனவும் இருந்தது மட்டுமே இந்திய டெஸ்ட் அணியை மாற்றி அமைத்ததில் முக்கிய பங்கு வகிக்கவில்லை.

- Advertisement -

விராட் கோலி முதலில் முக்கியத்துவம் கொடுத்தது உடல் தகுதிக்குதான். அவர் மற்றவர்களிடம் அதை முதலில் எதிர்பார்க்காமல் தன்னைத்தானே மிகுந்த ஒழுக்கத்துடன் உடல் தகுதியில் மேம்படுத்திக் கொண்டே வந்தார். அதற்கு அடுத்து இயல்பாகவே இந்திய அணியில் உடல் தகுதி என்பது அடிப்படையான விஷயமாக மாறியது.

விராட் கோலி உடல் தகுதிக்காக உடற்பயிற்சியை மட்டுமே நம்பி இருந்தவர் கிடையாது. அவர் இதற்காக உணவு விஷயத்தில் பல தியாகங்களை செய்திருக்கிறார். அவரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் விரும்பியதை சாப்பிட முடியாது என்பது தான் உண்மை. மேலும் அவர் ஒரு சாப்பாட்டுபிரியரும் கூட. ஆனாலும் விராட் கோலி இதையெல்லாம் தியாகம் செய்த அர்ப்பணிப்பால்தான் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டி இருக்கிறார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “விராட் கோலி நான்கு பேரின் உணவை தனியாளாக சாப்பிடக்கூடிய ஒரு மனிதர். அவர் உணவைப் பற்றி நிறைய பேசுவார். சாப்பிடத் சென்றால் ஏதாவது ஆர்டர் செய்ய கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் ஒரு உணவு வெறியர்.

- Advertisement -

ஆனால் திடீரென அவரிடம் இதில் நிறைய மாற்றங்கள் தென்பட்டது. அவர் உணவு பழக்கவழக்கத்தில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட உணவை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் தான் அவர் சாப்பிட முடியும். மேலும்குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இவ்வளவு கண்டிப்பாக ஏன் இருக்க வேண்டும்? என நான் கேட்டேன். அவர் தன்னைத்தானே ஒழுக்கப் படுத்திக் கொண்டு என்னையும் அதற்குள் அழைத்து சென்றார்.

இதையும் படிங்க : 2024 ஐபிஎல் ஏலத்தில் விற்காத சர்பராஸ் கான்.. ஒரே அணியால் மட்டும் வாங்க முடியும்.. மற்ற வாய்ப்புகள் என்ன?

விராட் கோலியின் வழிகாட்டுதலால் அடுத்த இரண்டு வருடங்கள் எனக்கு மிகவும் நன்றாக சென்றது. நான் என்னுடைய உடல் தகுதியில் உச்சத்தை அடைந்தேன். அவர் என்னை ஜிம்மிற்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். அவரை நான் என்னுடைய பிட்னஸ் குரு என்பேன். இந்திய கிரிக்கெட்டில் உடல் தகுதியை மாற்றி அமைத்தவர் அவர்” என்று கூறியிருக்கிறார்.