அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு தன்னுடைய இந்திய அணி எதுவென இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் யுனைடெட் அரபு எமிரேட்டில் எட்டு ஆசிய அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பைத் தொடர் டி20 வடிவத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வழக்கம் போல் இந்தியா இடம் பெறும் பிரிவில் பாகிஸ்தான் அணியும் இடம் பெற்று இருக்கிறது.
இந்திய டி20 அணியில் சமீபத்தில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் மூன்று சதங்கள் அடித்திருக்கிறார். இதேபோல திலக் வர்மா இரண்டு சதங்கள் எடுத்திருக்கிறார். இவர்கள் இருவரும் விளையாடுவதால் விக்கெட் கீப்பர் கிடைக்கிறார் மேலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்தில் வர சரியாக இருக்கிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஹர்பஜன்சிங் தனது அணியில் தேர்வு செய்யவில்லை. அதே சமயத்தில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார். இத்துடன் விக்கெட் கீப்பராக ரிஷப்மென்ட் அல்லது கேஎல்.ராகுல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். மேலும் முகமது சமியையும் தேர்வு செய்யவில்லை.
இதுகுறித்து பேசி உள்ள ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “யஷஸ்வி ஜெய்ஸ்வால்,
அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹார்டிக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்”
இதையும் படிங்க : டிராவிட் கிட்ட சிக்கும் கம்பீர்.. ரோகித் வழியில் போனால் தப்பிக்கலாம்.. இந்திய ரசிகர்கள் அறிவுரை
“நான் வேறு எந்த கீப்பரையும் வைக்காததால் கேஎல்.ராகுல் நல்ல தேர்வாகவும் இருக்கலாம். அவர் அல்லது ரிஷப் பந்த் இருவரில் ஒருவர் இருக்க வேண்டும். மேலும் கில் இன்னொரு துவக்க இடத்திற்கான தேர்வாக இருப்பார். அவரால் மைதானம் முழுவதும் தேவைப்படும் பொழுது அடித்து விளையாட முடியும். மேலும் பவுண்டரி சிக்ஸர் அடிப்பது மட்டுமே விளையாட்டு அல்ல. நீண்ட இன்னிங்ஸ் விளையாட வீரர் தேவை. அத்துடன் 150 அல்லது 160 ஸ்ட்ரைக் ரேட்டில் கில் விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார்.