தற்போது இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு அவரது சில முடிவுகளாலே பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் பெரிய செக் காத்திருக்கிறது.
அடுத்து 2026 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை என இரு நாடுகள் சேர்ந்து கடத்துகின்றன. இதற்கான அணியை 2025 ஆம் ஆண்டு முதல் கம்பீர் உருவாக்கி நடத்தி வருகிறார். தற்போது இதில்தான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
டிராவிட் – ரோகித் சாதனை
கடந்த முறை 2024 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி சிறப்பான முறையில் வியூகங்களை வகுத்து விளையாடி வென்றது. கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் என மூவரிடமும் ஒற்றுமை இருந்தது.
உதாரணமாக அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடி உலகக் கோப்பையையும் வென்றார்கள். அந்த அளவிற்கு தேர்வு மற்றும் திட்டம் மற்றும் கள வியூகங்கள் என அனைத்திலும் ஒற்றுமை காணப்பட்டது.
சிக்கும் கம்பீர்
இந்த நிலையில் அடுத்த ஆண்டு உள்நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது இந்திய அணி டீ20 உலக சாம்பியனாக இருக்கிறது. இந்த காரணங்களால் டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க : கம்பீர் முதல் நாளே எங்ககிட்ட அதை சொல்லிட்டார்.. எல்லாருமே ஏத்துக்கிட்டோம்.. அதான் ஜெயிச்சோம் – கருண் நாயர் பேட்டி
கம்பீர் ஏற்கனவே அதிரடியான டி20 அணியை உருவாக்கி விட்டார். ஆனால் தற்போது இல்லை உள்ளே கொண்டு வர முயற்சி செய்வதால், கேப்டன் சூரியகுமார் யாதவ் உடன் ஒற்றுமை இல்லாமல் போய்விட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்து உலக கோப்பையை வெல்ல முடியாவிட்டால், டிராவிட் உடன் கம்பீர கம்பேர் செய்து கடுமையான விமர்சனங்கள் வரும். மேலும் அவருடைய பயிற்சியாளர் பொறுப்பும் முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.






