இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு அந்த அணி வீரர்கள் கைகுலுக்க தாமதமாக வந்ததால் கோபம் அடைந்த தோனி ட்ரெஸ்ஸிங் ரூம் அறையின் ஸ்கிரீனை உடைத்தார் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் உடன் ஓய்வு பெற இருந்ததாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தால் தோனி ஒருவேளை ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
விராட் கோலி – யாஸ் தயால்
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் மோதினர். வெல்லும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கடைசியாக சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கையாக பேட்டிங்கில் களத்தில் தோனி இருந்தார்.
இந்த நிலையில் யாஸ் தயால் பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்தார். ஆர் சி பி அணியின் வெற்றி கொண்டாட்டங்கள் அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. போட்டியை வென்ற பிறகு அவர்கள் அதிக நேரம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சிஎஸ்கே அணி நீண்ட நேரம் காத்திருந்தது. அதில் வரிசையில் இருந்த தோனி அணி வீரர்களிடம் ஏதோ கூறிவிட்டது கைகுலுக்காமல் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி ஸ்கிரீனை உடைத்தார்
இதுகுறித்து ஹர்பஜன் சிங் தற்பொழுது கூறும்பொழுது ” ஆர்சிபி வெற்றியை கொண்டாடியது. அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்கின்ற காரணத்தினால் அதற்கு தகுதியானவர்கள். நான் மேலிருந்து நடந்த விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். சிஎஸ்கே கை கொடுக்க வரிசையில் நின்று இருந்தது. ஆனால் ஆர்சிபி வருவதற்கு சற்று தாமதமானது”
“எனவே அவர்கள் வர தாமதமானதால் தோனி உடனே அங்கிருந்து கிளம்பி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார். அப்பொழுது அந்த அறிக்கை வெளியே இருந்த ஒரு ஸ்கிரீனை கோபத்தில் குத்தினார். ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் உணர்ச்சிகள் இருக்கும் அது ஒரு பிரச்சனை இல்லை பரவாயில்லை”
இதையும் படிங்க : 11 சிக்ஸ்.. 9 ஃபோர்ஸ்.. கப்தில் அபார ஆட்டம்.. யூசுப் பதானின் அதிரடி வீண்.. சவுத்தர்ன் அணி வெற்றி.. லெஜண்ட்ஸ் கிரிக்கெட் 2024
“அன்று தோனி அமைதியாக இல்லை. ஒருவேளை கோப்பையுடன் ஓய்வு பெற வேண்டும் என்கின்ற அவருடைய கனவு கண்முன்னே சிதைந்தது காரணமாக இருக்கலாம். 2023ஆம் ஆண்டு கோப்பையை வென்றவுடன் ஓய்வு பெற்று இருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை. எனவே அடுத்தடுத்த வருடங்கள் அவரைப் பார்க்கலாம். மேலும் அவர் எவ்வளவு ஆண்டு விளையாடுவார் என்பதை அவர்தான் கூற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.