11 சிக்ஸ்.. 9 ஃபோர்ஸ்.. கப்தில் அபார ஆட்டம்.. யூசுப் பதானின் அதிரடி வீண்.. சவுத்தர்ன் அணி வெற்றி.. லெஜண்ட்ஸ் கிரிக்கெட் 2024

0
285

லெஜென்ஸ் லீக் கிரிக்கெட்டின் 12வது ஆட்டத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சவுத்தர்ன் அணி வீரர் மார்ட்டின் கப்திலின் அதிரடியில் சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 24 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றுள்ளது.

சவுத்தர்ன் அணியின் அதிரடி வீரரான மார்ட்டின் கப்தில் அதிரடியான ஆட்டத்தால் மிகப்பெரிய ரன்கள் இலக்கை எளிதாகக் கடந்து வெற்றி பெற வைத்திருக்கிறார்.

- Advertisement -

உலகின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் லெஜென்ஸ் லீக் கிரிக்கெட் 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் பன்னிரண்டாவது லீக் போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் இர்பான் பதான் தலைமையிலான கோனார்க் சூர்யா ஒடிசா அணியும் கோசுவாமி தலைமையிலான சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகளும் மோதி விளையாடின. இதில் ஏற்கனவே சவுத்தர்ன் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் சில சொல்லப்படாத காரணங்களால் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பேட்டிங் செய்த கோனார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லெவி 21 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒன்பது பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் என 63 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு மிடில் வரிசையில் களமிறங்கிய யூசுப் பதான் 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். இதனால் கோனார்க் அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சவுதத்ர்ன் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கோஸ்வாமி 15 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நியூசிலாந்து அணியை சேர்ந்த முன்னாள் அதிரடி வீரர் மார்ட்டின் கப்தில் தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். தான் எதிர்கொண்ட பந்துகளை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 54 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர் என 131 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய வீரர்களில் மசகட்சா 20 ரன்கள், நெகி 14 ரன்களும் குவிக்க சவுத்தர்ன் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 16 ஓவர்களில் 195 ரன்கள் குவித்து 24 பந்துகள் மீதம் வைத்து மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. 131 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாக விளங்கிய கப்தில் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க:என்னை நம்புங்க.. 24ல 23 தடவ இதை சரியா செஞ்சதுனாலதான் ஜெயிக்க முடிஞ்சுது – ரோகித் சர்மா பேட்டி

இதில் புள்ளிகள் பட்டியலில் சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி ஐந்து ஆட்டங்களில் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதில் கோனார்க் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, இரண்டு டிரா என புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -