“இது எல்லாம் ஒரு ஷாட்டா?” – ரோகித் சர்மாவை வெளுத்து வாங்கிய ஹர்பஜன் சிங்

0
337

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான ஷாட் ஒன்று ஆடி ஆட்டம் இழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் ரோகித் சர்மா எடுத்த தவறான ஒரு முடிவால் அவர் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதன் மூலம் மற்ற வீரர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங் நாதன் லயன் விரித்த வலையில் ரோகித் சர்மா சிக்கி இருப்பதாக விமர்சித்துள்ளார். அதில் ஒரு பந்துவீச்சாளர் ஸ்டம்பின் வலது பக்கத்தில் இருந்து பந்து வீச வந்தால் பேட்ஸ்மனின் காலை நோக்கி தான் பந்து வீசுவார்.

இதன் காரணமாக அவர்கள் lBW ஆகலாம். இல்லை போல்ட் ஆகலாம். அப்படி ஸ்டெம்பை நோக்கி வீசும் போது பேட்ஸ்மேன் ஸ்வீப் ஷாட் விளையாடினால் பந்துவீச்சாளர்களை விட சந்தோஷமாக இருக்கும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது.

ஏனென்றால் ஸ்வீப் ஷாட் ஆடினால் அது நிச்சயமாக எல்பி டபிள்யு மாறிவிடும் என அவர்களுக்கு தெரியும். லயான் விரித்த வலையில் ரோகித் சர்மா வசமாக சிக்கினார். ஆடுகளம் அபாயகரமாக இல்லாத நிலையில் ரோகித் சர்மா சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ஆடி ரன்களை சேர்த்து இருக்கலாம்.ஆனால் அவர் தேவையில்லாமல் ஸ்விப் ஷாட் ஆடி ஆட்டமிழந்துவிட்டார்.

- Advertisement -

என்னை கேட்டால் அது மோசமான ஷாட் . அவர் களத்தில் கொஞ்ச நேரம் நிற்க முயற்சி செய்திருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஐந்து ரன்கள் அடிப்பதெல்லாம் மிகவும் அசாத்தியமான விஷயம். முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 164 ரன்கள் அடித்ததற்கு காரணம் ரோகித் சர்மா களத்தில் நின்று வேகமாக ஆடியதே காரணம்.

ரோகித் சர்மா களத்தில் நின்றவரை எதிரணிக்கு விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்பை இல்லாமல் இருந்தது. ஆனால் அவர் ஒரு ஷாட் ஆடி ஆட்டமிழந்து எதிரணிக்கு வாய்ப்பைக் கொடுத்து விட்டார். ரோகித் சர்மாவும் விராட் கோலியும் ஒன்றாக நின்ற பேட்டிங் செய்திருந்தால், இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற 50 சதவீதம் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இப்போது கொஞ்சம் சூழல் கடினமாக மாறிவிட்டது என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.