ரோகித் இந்த 11 பேர் வச்சு விளையாடுங்க.. இவங்க 2 பேர் வேண்டாம் – ஹர்பஜன் சிங் பிளேயிங் லெவன்

0
202
Rohit

நாளை துவங்க இருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் மாதம் ஐந்தாம் தேதி விளையாடுகிறது. இதற்கு முன்பாக இந்திய அணிக்கு எது வலிமையான பிளேயிங் லெவனாக இருக்கும் என ஹர்பஜன்சிங் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “என்னைப் பொறுத்தவரை துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் வருவார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு அடுத்து விராட் கோலியும் அவருக்கு அடுத்து சூரியகுமார் யாவும் வருவார்கள். அதே சமயத்தில் ரிஷப் பண்ட்டை விட சிறப்பாக விளையாடும் சஞ்சு சாம்சனுக்கு ஐந்தாவது இடத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவை ஆறாவது இடத்திலும் அவரை தொடர்ந்து ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும் வருவார்கள். மேலும் என்னுடைய அணியில் குல்தீப் யாதவ் இடத்தில் சாகல் விளையாட வேண்டும். இதற்கு அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் விளையாட வேண்டும்.

இதில் மாற்றத்திற்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு சுழல் பந்துவீச்சாளர் தேவை இல்லை என்று நினைத்தால் நீங்கள் சிவம் துபேவை சேர்க்கலாம். இல்லை ஆடுகளம் இன்னும் சிறப்பாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது என்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்து விட்டு சுழல் பந்துவீச்சாளரை சேர்க்கலாம்.

- Advertisement -

இப்படியான நிலை வரும் பொழுது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் பங்களிப்பு செய்ய வேண்டியது இருக்கும். அவர் ஒரு மூன்று ஓவர்கள் பேச வேண்டும். முதல் ஓவரிலோ அல்லது பவர் பிலே முடிந்தோ ஹர்திக் பாண்டியா வந்து வீச்சுக்கு வருவது சரியான ஒன்றாகவும் அமையும்” என்று கூறியிருக்கிறார்.

தம்பி இதையும் படிங்க : தம்பி ரோகித் வெஸ்ட் இண்டீஸ் நிலைமை முன்ன மாதிரி இல்ல.. தப்பு கணக்கு போடாத.. இத செய் – கவாஸ்கர் அறிவுரை

ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுத்திருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணி பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ், அர்ஸ்தீப் சிங் மற்றும் சாகல்.

- Advertisement -