ஐசிசி நடத்தும் ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடர் தற்பொழுது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நாளை முதல் நடைபெற இருக்கிறது. வித்தியாசமான சூழ்நிலையைக் கொண்ட இந்த இரண்டு நாடுகளிலும் எப்படி பிளேயிங் லெவனை அமைக்கலாம் என சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
பொதுவாக வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைகள் சுழல் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் அமெரிக்காவில் சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என யாருக்கும் பெரிதாக தெரியாது.
இப்படியான நிலையில் சுனில் கவாஸ்கர் வித்தியாசமான கருத்து ஒன்றையும் முன் வைத்திருக்கிறார். மேலும் ரோகித் சர்மா எப்படியான பிளேயிங் லெவனை அமைத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுரை கூறியிருக்கிறார். மேலும் இந்திய அணி அனுபவமும் இளமையும் கொண்ட சிறப்பான அணியாக இருக்கிறது என்றும் பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்த அணிகள் நல்ல அனுபவமும் மற்றும் இளமையும் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் ரோஹித் சர்மா விராட் கோலி ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா போன்ற அனுபவ வீரர்களும், சிவம் துபே ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களும் இருக்கிறார்கள். இந்த அணியில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய பல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல டி20 அனுபவமும் இருக்கிறது. இவர்களால் எந்த வடிவத்திலும் விளையாட முடியும்.
வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் உள்ள ஆடுகளங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி தாக்குதல் சமநிலையில் இருக்க வேண்டும். எனவே மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் உடன் ஹர்திக் பாண்டியாவை பேக்கப் பந்து வீச்சாளராக வைத்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் அணியின் சமநிலையை பராமரிக்கும்.
இதையும் படிங்க : ஐபிஎல்-ல் யார்க்கரை கத்துக்கல.. நான் அத செலக்ட் பண்ணது வேற இடத்துல – பும்ரா ஸ்பெஷல் பேட்டி
கரீபியன் ஆடுகளங்கள் முன்பு போல பேட்டிங் செய்வதற்கு கடினமாக இல்லை. முன்பு அங்கு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சாதகமான நிலைமை இருக்கும். தற்பொழுது அங்கு பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் ரன் அடிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. நான் இங்கு நல்ல போட்டியை எதிர்பார்க்கிறேன். கரீபியனில் உலகக் கோப்பை நடப்பது சுவாரசியமான ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.