தம்பி அபிஷேக் இதை மட்டும் மாத்தி விளையாடு.. உன்னோட பேட் பேசும் நாள் வரும் – ஹர்பஜன் சிங் அறிவுரை

0
7
Abhishek

இந்திய டி20 அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று டக் அவுட் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அவருக்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.

நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அவர் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஏற்கனவே ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஸ்வின் சுட்டிக்காட்டல்

தற்போது அபிஷேக் ஷர்மா ஆப் ஸ்பின்னுக்கு எதிராக தடுமாறி வருகிறார். பொதுவாக அவர் முன் காலை விலக்கி வைத்து பந்தை லெக் சைடு அடிக்கக் கூடியவர். இதன் காரணமாக ஆப் ஸ்பின்னர்கள் அவர் கையை சுற்றி அடிப்பதற்கு இடம் கொடுக்காமல் பந்தை நேராக உடம்புக்குள் வீசுகிறார்கள். மேலும் அவர் பந்தை நின்ற இடத்தில் இருந்து நேராக அடிக்க முடியாத லென்த்தில் வீசுகிறார்கள். இதன் காரணமாக அவர் காலை விலக்கி அடிக்கப் போகும்பொழுது ஆட்டம் இழந்து விடுகிறார்.

இது குறித்து பேசி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அபிஷேக் சர்மாவின் இந்த பலவீனத்தை குறிப்பிட்டு ஐபிஎல் தொடரில் தன் பந்துவீச்சுக்கு எதிராகவும் இதே போல அவர் தடுமாறினார் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் அவர் சீக்கிரத்தில் இதிலிருந்து வெளியில் வந்து விடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதைச் செய்ய வேண்டும்

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “இதுபோன்ற ஒரு நிலையைச் சந்திக்கும் பொழுது மனதுக்குள் பல விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அபிஷேக் ஷர்மாவுக்கு நான் சில விஷயங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதெல்லாம் கடந்து போய்விடும் ஆனால் அவர் தன்னுடைய திறன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அவருடைய பேட் பேசும் நாள் வரும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெரிய போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார்”

இதையும் படிங்க : ஷிவம் துபேவை இனி தடுக்கவே முடியாது.. அவர் இந்த டெக்னிக்ல வந்து இருக்கார்.. சாதாரண விஷயம் இல்ல – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

“அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அவர் மிட் விக்கெட் திசையை விட்டு நேராக அடிக்க முயற்சி செய்ய வேண்டும். முதல் ஒன்று இரண்டு ரன்கள் எடுத்துவிட்டு அவர் ஷாட் விளையாட ஆரம்பிக்கும் பொழுது நம்பிக்கை ஏற்படும். தென் ஆப்பிரிக்காவும் ஆரம்பத்திலேயே ஆப் ஸ்பின்னரை கொண்டு வரலாம். எனவே இதெல்லாம் சீக்கிரத்தில் மாறிவிடும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -