நான் செஞ்ச தவறை நினைத்து வெட்கப்பட்டேன்.. பேட்டிங்கில் சிறப்பாக விளையாட அந்த தவறே காரணம் – பட்லர் பேட்டி

0
241

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஜாஸ் பட்லர் தான் விளையாடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டன் 54 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 4 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை பட்லர் தவறவிட்டார்.

முகமது சிராஜ் பந்து வீசியபோது சால்ட் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை பட்லர் எதிர்பாராத விதமாக தவறவிட்டார். இருப்பினும் பில் சால்ட் 14 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அந்த கேட்ச் வாய்ப்பு குறித்தும், அதற்குப் பின்னர் தான் பேட்டிங் செய்த விதம் குறித்தும் ஜாஸ் பட்லர் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார். வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு பட்லர் 73 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து பட்லர் விரிவாக கூறும்போது ” எங்கள் அணியின் பேட்டிங்கை ரசித்தேன். பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். பீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். நானே இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். பெங்களூர் அணி நிர்ணயித்த இலக்கிலிருந்து இன்னும் 30 ரன்கள் குறைவாக அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கலாம். அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட அதற்கு நானே வெட்கப்பட்டேன். பில் சால்ட் ஒரு ஆபத்தான பேட்ஸ்மேன்.

இதையும் படிங்க:ஆர்சிபிக்கு இதை செஞ்சா.. அவங்க சிக்கலல மாட்டுவாங்கன்னு தெரியும்.. சரியா பிளான் போட்டோம் – சுப்மான் கில் பேட்டி

அவரது கேட்ச் வந்த போது நான் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் பாணியில் கொண்டாட முயற்சி செய்து அந்த பந்தை சரியாக கணித்து பிடிக்காமல் கோட்டை விட்டேன். அதற்காகவே அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு களம் இறங்கினேன். எனவே ஆரம்பத்தில் விளையாடிய தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் அணியில் தரமான பந்துவீச்சாளர்கள், தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆபத்தான ஹிட்டர்கள் இருக்கிறார்கள்” என்று பட்லர் கூறி இருக்கிறார்.

- Advertisement -