நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 14 ஆவது கிரிக்கெட் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்றது குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் சில முக்கிய கருத்துகளை கூறுகிறார்.
குஜராத் அணி வெற்றி
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆல் ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார் இதில் 5 சிக்சர்கள் அடங்கும். குஜராத் அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது. அணியின் தொடக்க வீரர் கேப்டன் கில் விரைவில் வெளியேறினாலும், ஜாஸ் பட்லர் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி அதிரடியாக விளையாடி குஜராத் அணியை வெற்றிப்பாதைக்கு அருகில் அழைத்துச் சென்றது. இதில் சாய் சுதர்சன் 49 ரன்னில் வெளியேற, அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 39 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதனால் 17.5 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்து குஜராத் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது அவசியம்
இந்த சூழ்நிலையில் வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் கில் கூறும் போது “இந்த மைதானத்தை பொருத்தவரை பெங்களூர் அணியை 170 ரன்கள் கட்டுப்படுத்தியதில் ரொம்ப மகிழ்ச்சி. சில நேரங்களில் விக்கெட்டில் ஏதோ ஒன்று இருக்கும். நீங்கள் 250 ரன்கள் கூட எடுக்கலாம், ஆனால் சில சமயங்களில் தொடக்கத்திலேயே விக்கட்டுகள் கைப்பற்றலாம். முதல் 7 முதல் 8 ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏதோ ஒன்று இருந்தது.
இதையும் படிங்க:நாங்க இந்த தவறை செஞ்சிருக்க கூடாது.. போட்டியில் நாங்கள் தோற்க அதுதான் முக்கிய காரணம் – ஆர்சிபி கேப்டன் பேட்டி
நாங்கள் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்த விளையாட்டில் இருக்கிறோம் என்பது நன்றாக தெரியும். உங்களுக்கு சில சமயம் சாதகமாக நடைபெறவில்லை என்றால், ஏமாற்றம் அடைகிறீர்கள் ஆனால் திரும்பி வரவேண்டும். அடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தை கருத்தில் கொண்டு தொழில்முறையாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். எனவே அதற்கு தகுந்தவாறு நாங்கள் பேட்டிங் செய்தோம். சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றியமைத்து அதற்கு ஏற்ப விளையாடுவது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.






