இன்று ஐபிஎல் தொடரின் 40வது போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து திரும்ப வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி பேட்டிங்கில் மிரட்டி இருக்கிறார்.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்த முறை டேவிட் வார்னர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிரடியாக ஆரம்பிக்க முதல் விக்கெட்டுக்கு 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. ஜாக் பிரேசர் மெக்கர்க் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து உடனே பிரிதிவி ஷா 7 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
நான்காவது பேட்ஸ்மேனாக அனுப்பப்பட்ட ஷாய் ஹோப் 5 பந்தில் 1 பவுண்டரி உடன் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் தமிழக அணிக்காக விளையாடும் சந்தீப் வாரியர் கைப்பற்றினார்.
ருத்ர தாண்டவம் ஆடிய ரிஷப் பண்ட்
இதைத்தொடர்ந்து இந்த முறை மூன்றாவது வீரராக அனுப்பப்பட்ட அக்சர் படேல் மற்றும் கேப்டன் ரிஷப்மென்ட் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்கள். அக்சர் படேல் சிறப்பாக விளையாடி 37 பந்தில் அரை சதம் அடித்தார். இறுதியில் அவர் 43 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 68 பந்துகளில் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் 34 பந்தில் தனது அரை சதத்தை அடித்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற ரிஷப் பண்ட் 43 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 88 ரன்கள் குவித்து மிரட்டினார். இவருடன் இணைந்து விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி வெறும் 18 பந்துகளில் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க : ப்ளீஸ் ஜடேஜாவை தனியா விட்டுருங்க.. அவர பத்தி பேச எதுவும் இல்லை – கெவின் பீட்டர்சன் விமர்சனம்
இந்த போட்டியில் மோகித் சர்மா பேசிய கடைசி ஓவரில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதில் 30 ரன்கள் ரிஷப் பண்ட் அடித்தார். மேலும் மோகித் சர்மா நான்கு ஓவர்கள் பந்துவீசி 73 ரன்கள் விட்டுத் தந்து, ஐபிஎல் தொடரில் மிக மோசமான பந்து வீச்சு சாதனையை படைத்திருக்கிறார். பசில் தம்பி ஆர்சிபி அணிக்கு எதிராக 70 ரன்கள் விட்டுத் தந்ததே இந்த வகையில் மோசமான சாதனையாக இருந்தது. மேலும் டெல்லி அணிக்காக வார்ன்ர் 24 அரை சதங்கள் நடித்திருக்கிறார். ஷிகர் தவான் 18 அரை சதங்கள் அடித்திருந்தார். தற்பொழுது இதை உடைத்து டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் 19 அரை சதங்கள் அடித்திருக்கிறார்.