யார் போனா என்ன.. குஜராத் டைட்டன்ஸ்க்கு இந்த தமிழ்நாட்டு பையன் மெயின் ரோல் பண்ணுவார் – நெக்ரா பேட்டி

0
314
Nehra

ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை உருவாக்கியதில் பெரிய பங்கு, இப்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கும் இந்திய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஸ் நெக்ராவுக்கு உண்டு. ஏலத்தின் போது அவர் தேர்ந்தெடுத்த வீரர்கள் கொண்ட அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பெரும்பாலானவர்கள் அந்த அணிக்கு பத்தாவது இடத்தை கொடுத்தார்கள். ஆனால் முதல் ஐபிஎல் தொடரிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு, இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று, கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் கூட அதிக நேரம் ஆதிக்கம் செலுத்திய அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணிதான் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்டார். ஆனாலும் இதைச் சமாளித்து இந்த ஆண்டு மினி ஏலத்தில் தேவைக்கு சரியான வீரர்களை வாங்கி குஜராத் டைட்டன்ஸ் வலிமையாகவே இருக்கிறது.

மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியை எடுத்துக் கொண்டால் தமிழக இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை கொடுக்கும் அணியாக இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திலேயே சாய் சுதர்ஷன் மற்றும் சாய் கிஷோர் என இருவரை வாங்கியதோடு, இருவருக்குமே விளையாடும் வாய்ப்புகளையும் கொடுத்தது. இதில் இரண்டு வீரர்களுமே கிடைத்த வாய்ப்புகளில் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். குஜராத் தந்த வாய்ப்பில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சாய் சுதர்சன் இந்திய அணிக்காகவும் அறிமுகம் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் மினி ஏலத்தில் கழட்டிவிட்ட தமிழக வீரரான ஷாருக்கான் குஜராத் ஐட்டம் அணி ஏலத்தில் கடுமையாக மோதி வாங்கி இருக்கிறது. டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா மற்றும் ரஷித் கான் என மூன்று பினிஷர்கள் இருந்தாலும் கூட, ஷாருக்கானையும் அந்த இடத்திற்கு வாங்கி இருக்கிறது. அந்த அணி ஆரம்பத்திலேயே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாததற்காக விமர்சிக்கப்பட்டு ஆனால் கோப்பையை வென்று காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஷிஸ் நெக்ரா பேசும் பொழுது “கடந்த ஆண்டு சாய் கிஷோருக்கு நாங்கள் அதிக வாய்ப்புகள் கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் இந்த ஆண்டு முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் நாம் புதிய வீரர்களை பார்த்து வருகிறோம். நீங்கள்உங்களை நம்பி தயாராக வேண்டும். எங்களிடம் அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை என்று கிடையாது. சாய் கிஷோர் மற்றும் ஜெயந்த் யாதவ் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சென்னை மற்றும் லக்னோவில் மெதுவான ஆடுகளங்கள் இருக்கும். தேவைக்கு சரியான இடங்களில் சரியான வீரர்களை பயன்படுத்துவோம்.

இதையும் படிங்க : தோனி பாய் எடுத்த அந்த முடிவு.. என் மொத்த கிரிக்கெட் வாழ்க்கையையும் பாதிச்சது – குல்தீப் யாதவ் பேட்டி

எங்கள் அணியில் உள்ள ஃபினிஷர்களை பார்க்கும் பொழுது, ஷாருக்கான் முக்கிய வீரராக வரப் போகிறார். மேலும் ஐபிஎல் என்பது மூன்று முதல் ஐந்து ஆட்டங்கள் விளையாடக்கூடிய தொடர் கிடையாது. இது ஒரு நீண்ட தொடர் மேலும் கோடை காலம் என்பதால் வீரர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. எனவே இதற்கு ஏற்றபடி எல்லா வீரர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.