கோலிக்கு இப்படி பண்ணது நியாயமில்ல.. இந்த மாதிரி செய்யுங்க போதும் – ஏபி டிவில்லியர்ஸ் மாஸ் ஐடியா

0
25
Virat

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் எனது வெளியேறினார். தற்பொழுது இதற்கு தீர்வு குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் யோசனை கூறியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஐந்து போட்டிகள் தோல்வி அடைந்த பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டிய பெரிய கட்டாயத்தில் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி 6 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 18 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்து களத்தில் நின்றார். இன்று அவர் ஆரம்பித்த விதம் மற்றும் விளையாடிய விதம் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

இப்படியான சூழலில் ஹர்ஷித் ராணா வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தை விராட் கோலி விளையாடப் போக, அந்த ஃபுல் டாஸ் பந்து விராட் கோலியின் நெஞ்சுக்கு வந்தது. அதே சமயத்தில் பந்து மெதுவாகவும் இருந்தது. விராட் கோலி பந்தை நெஞ்சுக்கு நேராக தடுக்க, பந்து கேட்ச் ஆனது. எல்லோரும் இது நோ-பால் என்று நினைத்திருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் மூன்றாவது நடுவர் விராட் கோலி கிரீஸ்க்குள் நின்று இருந்தால் பந்து இடுப்புக்கு கீழே தான் இருக்கும் எனக் கூறி அவுட் கொடுத்து விட்டார். இதற்கு விராட் கோலி மற்றும் பெங்களூர் கேப்டன் இருவரும் களத்தில் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். கடைசியில் விராட் கோலி வெளியேறி வருத்தத்துடன் சென்றுவிட்டார்.

இதையும் படிங்க : சாய் கிஷோருக்குதான் எல்லா பெருமையும்.. இனிமே எல்லா மேட்சையும் ஜெயிக்கப் போறோம் – சாம் கரன் பேட்டி

இந்த நிலையில் இதற்கு தீர்வு குறித்து பேசி இருக்கும் ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது ” இது நடுவரின் தவறு கிடையாது. நாம் தொழில்நுட்பத்தை கால மாற்றத்திற்கு தகுந்தார் போல் மேம்படுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஃபுட்பாலில் ஆப்சைடுக்கு கோடுகள் வரைந்து பயன்படுத்துவது போல. விராட் கோலி நின்றிருக்கும் இடத்தில் பந்தை அவர் எப்படி சந்தித்தாரோ, அதை வைத்து மட்டுமே அளவிட வேண்டும். பந்து கிரீஸ்க்குள் செல்லும்பொழுது எவ்வளவு உயரத்தில் இருக்கும் என்று பார்க்கக் கூடாது” என்று புது யோசனை கூறியிருக்கிறார்.

- Advertisement -