ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. இந்த மாதிரி கிரவுண்ட் பிட்ச்ல இத செய்யாம ஜெயிக்க முடியாது – சுப்மன் கில் பேட்டி

0
202
Gill

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணி அதிர்ஷ்டம் இல்லாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோல்விக்கு பின் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். டெல்லி தனது முதல் மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்த பிறகு, ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

டெல்லி கேப்பிட்டல் அணிக்கு ரிஷப் பண்ட் 43 பந்தில் ஆட்டம் இழக்காமல் 88 ரன்கள், அக்சர் படேல் 43 பந்தில் 66 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாகவும், பவுண்டரி எல்லைகள் மைதானத்தில் சிறியதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் 39 பந்தில் 65 ரன்கள், டேவிட் மில்லர் 23 பந்தில் 55 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, பேட்டிங்கில் இருந்த ரஷித் கானால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே நான்கு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின் பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் “நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடினோம் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் அணியின் வீரர்கள் அனைவரும் வெளிப்படுத்திய போராட்ட குணம் சிறப்பாக இருந்தது. 224 ரன்களை நீங்கள் துரத்தும் பொழுது திட்டம் என்று விவாதிக்க எதுவும் கிடையாது. நேராக உள்ளே சென்று முதல் பந்தில் இருந்து அடிக்க வேண்டியதுதான்.

- Advertisement -

இதையும் படிங்க : 1 பந்து 5 ரன்.. குஜராத்தை வீழ்த்திய டெல்லி.. தப்பிய சிஎஸ்கே.. மும்பை அணிக்கு மீண்டும் பின்னடைவு

பெரிய ஸ்கோர்கள் வருவதில் இம்பேக்ட் பிளேயரின் பங்கும் உண்டு. நாங்கள் அவர்களை 200 முதல் 210 ரன்களில் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் கடைசி இரண்டு மூன்று ஓவர்களில் நினைத்தது முடியவில்லை. டெல்லி போன்ற பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் மற்றும் சிறிய மைதானத்தில், பந்து வீச்சாளர்கள் வேரியேஷன் மற்றும் யார்க்கர்களை மிகவும் சரியாக செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறி இருக்கிறார்.