1 பந்து 5 ரன்.. குஜராத்தை வீழ்த்திய டெல்லி.. தப்பிய சிஎஸ்கே.. மும்பை அணிக்கு மீண்டும் பின்னடைவு

0
692
Rishabh

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல் கேப்டன் ரிஷப் பண்ட்டின் சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செயல்பாட்டால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய வைத்தது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு ஜாக் பிரேசர் மெக்கர்க் 23(24), பிரித்திவி ஷா 11(7), ஷாய் ஹோப் 5(6) என சீக்கிரத்தில் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாடி குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி 68 பந்துகளில் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அக்சர் படேல் சிறப்பாக விளையாடி 43 பந்தில் 5 பவுண்டரி 4 சிக்சர் உடன் 66 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து இறுதி வரை களத்தில் நின்ற கேப்டன் ரிஷப் பண்ட் 43 பந்தில் 5 பவுண்டரி 8 சிக்சர் உடன் 88 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து கடைசியில் அதிரடி காட்டிய ஸ்டப்ஸ் வெறும் 7 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்சர் உடன் 27 ரன்கள் எடுத்தார். டெல்லி கேப்பிட்டல் அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. மோகித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்கள் தந்து அதிக ரன் தந்தவராக ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்தார்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 6(5), சகா 39(25), அசமத்துல்லா ஓமர்சாய் 1(2), ஷாருக் கான் 8(5), ராகுல் திவாட்டியா 4(5) ரன்கள் எடுத்து வரிசையாக வெளியேறினார்கள். தமிழக வீரர் சாய் சுதர்சன் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர் உடன் 65 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

முகேஷ் குமாரின் கடைசி ஓவர்

இந்த நிலையில் டேவிட் மில்லர் ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய அரை சதம் அடித்தார். கடைசி மூன்று ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. இந்த முகேஷ் குமார் வீசிய 18 வது ஓவரில் டேவிட் மில்லர் 23 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர் உடன் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதற்கு அடுத்து சாய் கிஷோர் 7 பந்தில் 12 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் அடித்த ரசீத் கான், அடுத்த இரண்டு பந்துகளை தவற விட்டார். ஆனால் ஐந்தாவது பந்தில் சிக்ஸர் அடித்தார். எனவே கடைசிப் பந்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பந்தை நேராக அடித்த ரசீத் கானால் பவுண்டரிக்கு கூட அடிக்க முடியவில்லை. பரபரப்பான இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் ராசிக் சலாம் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : தமிழக வீரர் சாய் கிஷோருக்கு.. கில் செய்த காரியம்.. ரசிகர்கள் கடும் விமர்சனம்.. என்ன நடந்தது?

தற்போது புள்ளி பட்டியலில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் ஒன்பது போட்டிகளில் ஐந்து தோல்விகள் நான்கு வெற்றிகள் உடன், ஆறாவது ஏழாவது இடத்தில் இருக்கின்றன. சிஎஸ்கே அணி எட்டு போட்டியில் நான்கு வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில்ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்து குஜராத் அணி வெற்றி பெற்று இருந்தால், குஜராத் அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற சிஎஸ்கே அணி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி தோல்வி அடைந்திருந்தால் மும்பை எட்டாவது இடத்தில் இருந்து ஒரு இடம் மேலே வர வாய்ப்பு இருந்தது, ஆனால் தொடர்ந்து மும்பை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.