ஒரு லட்சம் பேர் ஆதரவு தராங்க.. வேற என்ன வேணும்.. சாய் சுதர்சன் கூட ஆடறது வேற மாதிரி – சுப்மன் கில் பேட்டி

0
310
Gill

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் அணி தங்களுடைய சொந்த மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் கேப்டன் சுப்மன் கில் அபார சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து, போட்டி குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் சுப்மன் கில் 55 பந்தில் 14 ரன்கள், சாய் சுதர்சன் 52 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. குஜராத் அணி 20 ஓவர்கள் மூன்று விக்கெட் இழந்து 231 ரன்கள்குவித்து அசத்தியது.

- Advertisement -

இந்த முறை சிஎஸ்கே அணி இலக்கை துரத்துவதற்கு துவக்க ஆட்டக்காரராக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரையும் அனுப்பியது. இவர்கள் இருவரும் தலா ஒரு ரன் எடுத்து ஏமாற்றம் அளித்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள். இத்தோடு கேப்டன் ருதுராஜ் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த டேரில் மிட்சல் 63(34), மொயின் அலி 56(36) இருவரும் சேர்ந்து 57 பந்துகளுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மேற்கொண்டு வெற்றிக்கான ரன் அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. இறுதியில் சிஎஸ்கே அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டும் எடுத்தது. முடிவில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய ஆட்டநாயகன் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் “எனக்கு கொஞ்சம் தசைப்பிடிப்பு இருந்தது அதனால்தான் பீல்டிங் செய்ய வரவில்லை வேறு ஒன்றும் கிடையாது. உங்களை ஒரு லட்சம் பேர் ஆதரிக்கும் பொழுது அங்கு எல்லாமே எளிதாகிவிடும். நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் நாங்கள் எந்த டார்கெட்டும் வைத்துக் கொள்ளவில்லை. எங்களுக்குள் நல்ல நட்பு உறவு இருக்கிறது. நாங்கள் கடந்த ஆண்டு சேர்ந்து நிறைய முறை விளையாடினோம். சாய் சுதர்ஷன் உடன் விளையாடுவது எப்பொழுதும் வேடிக்கையானது.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க தோத்தது ஜஸ்ட் இந்த விஷயத்துலதான்.. ஆனா அடுத்த போட்டி கடினத்திலும் கடினமானது – ருதுராஜ் பேட்டி

மோகித் பாய் எங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக நிறைய செய்திருக்கிறார். கடந்த இரண்டு மூன்று போட்டிகள் அவருக்கு சரியாக செல்லவில்லை. யாருக்குமே இப்படி மோசமான ஆட்டங்கள் இருக்கவே செய்யும். நாங்கள் ஒரு கட்டத்தில் 250 ரன்கள் என்று இருந்தோம். கடைசியில் அவர்கள் இரண்டு மூன்று ஓவர்கள் நன்றாக வீசினார்கள். நாங்கள் 10, 15 ரன்கள் பின்தங்கி இருந்தோம். ஆனால் போட்டியில் பின்தங்கி இருக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்