புதிய கேப்டனை அறிவித்தது குஜராத் டைட்டன்ஸ்.. ஹர்திக்குக்கு உருக்கமான வாழ்த்து!

0
10452
Hardik

ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா எந்த அணிக்கு செல்கிறார் என்பது குறித்தான பரபரப்புகளுக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணி நிர்வாகங்களும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இன்று இரண்டு அணி நிர்வாகங்களும் அதிகாரப்பூர்வமாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துவிட்டார் என்று கூறி இருக்கின்றனர்.

- Advertisement -

அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ட்ரேடிங் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று இருக்கின்ற காரணத்தினால், அந்த அணி மீண்டும் பழைய நிலைக்கு மிகவும் வலிமையான ஒரு அணியாக மாறி இருக்கிறது.

அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்புவது என்பது கடினமான ஒன்று. அவர்கள் நடக்க இருக்கின்ற மினி ஏலத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி புதிய கேப்டனாக கேன் வில்லியம்சனை நியமிக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் அதிரடியாக அவர்கள் வேறு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

குஜராத் டைட்டன்ஸ் தங்களுடைய அணிக்கு புதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் சுப்மன் கில்லை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் நீண்ட காலம் தங்கள் அணியை வழிநடத்த ஒரு கேப்டனை ஆரம்பத்திலேயே தைரியமாக முடிவு செய்து இருக்கிறது. மேலும் வெளியேறிய ஹர்திக் பாண்டியாவுக்கு ” நல்ல நினைவுகளை தந்ததற்கு நன்றி. உங்களுடைய அடுத்த பணிகள் சிறக்கட்டும்” என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வாழ்த்தி இருக்கிறது!

இப்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒரு வேகப்பந்துவீச்சு இந்திய ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை என்றாலும் கூட, ஒரு நம்பிக்கையான இந்திய பேட்ஸ்மேன் தேவையாக இருக்கிறது. கைவசம் பணம் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் தங்களுக்கு மிடிலில் விளையாட ஒரு இந்திய பேட்ஸ்மேனை கண்டுபிடிப்பார்கள் என்று நம்பலாம்!