கில் காலரில் மட்டும் தங்க நாணயம்.. உண்மையான காரணம் என்ன.? இந்திய பங்களாதேஷ் போட்டியில் அரிய நிகழ்வு.!

0
6985

இந்தியா மற்றும் பங்களாதேஷ அணிகளுக்கு இடையேயான இன்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி 13 வது உலகக் கோப்பை தொடரில் தனது நான்காவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் எடுத்தார். மேலும் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .

முன்னதாக முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 41.3 ஓவர்களில் 261 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் பங்களாதேஷ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

முதலாவது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா மற்றும் கில் இணைந்து 88 ரன்கள் சேர்த்தனர். 48 ரண்களில் ரோகித் சர்மா ஆட்டம் இழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் 55 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது சும்மாங்கில் உலகக் கோப்பையில் எடுக்கும் முதல் அரை சதமாகும் . இந்தப் போட்டியில் பல சிறப்பான ஷாட்களை ஆடிய அவர் சிக்ஸ் இருக்கு அடிக்கும் என்று ஆட்டம் இழந்தார். இந்தப் போட்டியில் சுப்பன் கில்லியின் சிறப்பான ஆட்டத்தோடு அவர் காலரில் அணிந்திருந்த தங்க நாணயம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது.

இந்தப் போட்டியில் அவர் ஆட வந்த போது தனது சீருடை காலரில் தங்க நாணயம் போன்று ஒன்று அணிந்திருந்தார். முதலில் அது ராசிக்காக ஏதோ அணிந்திருக்கிறார் என்று அனைவரும் கருதினர் . ஆனால் தற்போது அதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது. கடந்த மாதத்தின் ஐசிசி சிறந்த வீரராக கில் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு கொடுக்கப்பட்ட தங்க நாணயத்தை தான் இன்று தனது காலரில் அணிந்து அவர் உரையாடி இருக்கிறார். செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நேபால் அணிகளுக்கு எதிராக அரை சதம் எடுத்த கில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பான சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு அரை சதமும் ஒரு சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த கில்” ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்திய அணிக்காக ஆடுவது எப்போதுமே பெருமையான ஒரு விஷயம். மேலும் அணியின் வெற்றியில் பங்காற்றியது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இந்த விருது இன்னும் சிறப்பாக விளையாடுவதற்கு என்னை ஊக்கப்படுத்தும்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் அணியின் வெற்றிக்கு பங்காற்றியது மிகவும் சந்தோசமான ஒன்று. இந்த நேரத்தில் எனது அணியின் சக வீரர்கள் எனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லை என்றால் இந்த விருதுகள் எதுவும் சாத்தியமாகி இருக்காது” எனக் கூறினார்.

2023 ஆம் வருடம் 22 ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் கில் 1299 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 5 சதங்களும் 6 அரை சதங்களும் அடங்கும். இந்த வருடத்தில் இவரது ஒரு நாள் போட்டியின் சராசரி 68.36. ஸ்ட்ரைக் ரேட் 105.01. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில் 208 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .