இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்துவீச்சாளராக 22 வருடம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் உலகில் இவர் ஒரு ஆச்சரியமான வீரர். இந்த வயதில் வேகப்பந்து பேச்சாளராக எல்லா வகையிலும் மற்றவர்களுடன் போட்டியிடுவது என்பது முடியாத காரியம். ஆனால் இன்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் சீராக இருக்கிறார்.
தரம்சாலா மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியோடு, இந்திய அணி தொடரை நான்குக்கு ஒன்று என வென்று இருந்தாலும் கூட, அந்தப் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை பதிவு செய்த முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தது தான் மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது.
ஏனென்றால் இந்த வயதில் வேகப்பந்துவீச்சாளராக இருக்க முடியாது என்பது ஒன்று, மேலும் 700 விக்கட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் இனி கைப்பற்ற முடியாது என உறுதியாகவே கூறலாம். அப்படிப்பட்ட ஒரு அரிய ஆச்சரியமான நிகழ்வு தரம்சாலா மைதானத்தில் நடந்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதற்கு கடினமான இந்திய சூழ்நிலையில் 41 வயதில் இந்தத் தொடரில் பந்து வீசியதை பார்க்கும் பொழுது, அவர் சீக்கிரத்தில் ஓய்வு பெற மாட்டார் என்பது போல் தான் தெரிகிறது. அந்த அளவிற்கு அவருடைய பந்துவீச்சு செயல்பாடு மற்றும் வேகம் சிறப்பாக இருந்தது.
ஆண்டர்சனை பாராட்டி முகமது சாமிக்கு அறிவுரை கூறிய கிளன் மெக்ராத் கூறும்பொழுது “வேகப்பந்துவீச்சில் அடுத்த தலைமுறை வருவதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். பும்ராஇன்னும் கொஞ்சம் செல்ல வேண்டும். முகமது சமிக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது. சிராஜ்க்கு நிறைய காலம் இருக்கிறது. எனவே தற்போதைய இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு ஆயுட்காலம் இருக்கிறது.
சமி காயத்தால் இரண்டு தொடர்களை தவற விட்டு இருக்கிறார் இது கடினமான ஒன்று. ஆனால் அவர் போன்ற ஒரு வீரர் வைத்திருக்கும் விஷயம் அனுபவம். அவர் நீண்ட காலமாக இருந்து வருகிறார். மேலும் விதிவிலக்கான பந்துவீச்சாளர்.
ஆனால் சமிக்கு வயதாகும் பொழுது கடினமாக பயிற்சி செய்யவும், தயாராகவும், வெளியேறவும் உந்துதல் தேவை. 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சனை பாருங்கள், அவர் 700 விக்கெட்டுகள் எடுத்து இன்னும் சிறப்பாக இருக்கிறார்.
இதையும் படிங்க : “பாஸ்பால தூக்கி போடுங்க.. இத செய்யாம நீங்க ஜெயிக்க மாட்டீங்க” – நாசர் ஹூசைன் அறிவுரை
எனவே வயதாகும் பொழுதும் உங்களுடைய பந்துவீச்சில் சிறப்பாக இருக்க முடியும். இங்கு ஒரு வேகப்பந்துவீச்சாளராக வயதாகும் பொழுது உடல் ஒத்துழைப்பதுதான் பெரிய பிரச்சனை. அது நிச்சயமாக நீண்ட ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியிருக்கிறார்.