“சந்தேகமே கிடையாது.. பும்ரா எல்லோருக்கும் மேலே இருக்கிறார்.. காரணம் இதான்” – கிளன் மெக்ராத் பாராட்டு

0
337
Bumrah

இந்த முறை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு, வழக்கத்திற்கு மாறாக சுழல் பந்துவீச்சு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமும் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டை கைப்பற்றி, மொத்தமாக 10 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை இங்கிலாந்து தரப்பில் இருந்து வீழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இன்று வெற்றிக்குப் பின் பேசிய ரோஹித் சர்மா “இவ்வளவு பெரிய வெற்றி பெரும்பொழுது எல்லோரும் பேட்ஸ்மேன்கள் அடித்த சதம் மற்றும் ரன்கள் பற்றி பேசுவார்கள். ஆனால் டெஸ்ட் போட்டியில் வெல்ல எதிர் அணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றாமல் முடியாது” என்று பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு குறித்து கூறியிருந்தார்.

இந்த வகையில் பந்து வீச்சுக்கு சாதகம் இல்லாத மைதானங்களில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தன்னுடைய திறமை மற்றும் புத்திசாலித்தனமான பந்துவீச்சின் மூலமாக இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார்.

மொத்தமாக அவர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16.89 ஆவரேஜில் 19 விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே பந்துவீச்சில் மிகப்பெரிய வித்தியாசமாக இருந்தவர் பும்ரா மட்டும்தான். அந்த அளவிற்கு அவரது இடத்தை ஈடு செய்ய இரண்டு அணியிலுமே வீரர்கள் இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் உலகின் புகழ்பெற்ற தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் பும்ரா பற்றி கூறும்பொழுது “பும்ரா நிச்சயமாக எல்லோருக்கும் மேலே இருக்கிறார். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் அவரை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. காயத்தால் சில காலம் விளையாட முடியாமல் இருந்திருந்தாலும், அவர் தரத்துடன் இருக்கிறார்.

அவர் பந்து வீசுவதில் தனித்துவம் கொண்டவர் என்றாலும் கூட, அவருக்கு பந்து வீசுவதில் தனி அணுகுமுறை இருக்கிறது. அவர் சலிக்காமல் நாள் முழுவதும் ஓடுகிறார். மேலும் நல்ல வேகத்தில் சரியான பகுதிகளில் பந்தை வீசுகிறார்.

இதையும் படிங்க : “தெளிவா சொல்றேன்.. கிரிக்கெட்டில் இருந்து என்னுடைய ஓய்வு அப்போதுதான் நடக்கும்” ரோகித் சர்மா பதில்

மற்ற பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடும் பொழுது அவருக்கு வித்தியாசமான ரன்-அப் மற்றும் கொண்டிருந்தாலும் கூட, அவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கும் வெற்றியடைவதற்கும் தனி வழியை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.