தசைப்பிடிப்புடன் 201 ரன்.. மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் வெளியிட்ட உருக்கமான பதிவு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி.!

0
26369

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்தார். இதில் 10 சிக்ஸர்களும் 21 பவுண்டரிகளும் அடங்கும்.

சொன்னதாக இந்த போட்டியில் 292 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது கேப்டன் பேட் கம்மின்ஸ் உடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவர்கள் இருவரும் இணைந்து 202 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக எடுத்தனர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 8-வது விக்கெட்க்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

- Advertisement -

மேலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் இரண்டாவது பேட்டிங்கில் டபுள் செஞ்சுரி அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் மேக்ஸ்வெல். இதற்கு முன்பு பல வீரர்கள் ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்திருந்தாலும் இரண்டாவது பேட்டிங்கில் தற்போது தான் 200 ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மிடில் ஆர்டர் வீரராக களம் இறங்கி இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் மேக்ஸ்வெல் படைத்திருக்கிறார்.

இது போன்று பல சாதனைகள் படைத்திருந்தாலும் இந்தப் போட்டியில் அவர் மிகுந்த சிரமத்துடன் விளையாடினார். மும்பையில் நிலவிய அதிகமான வெப்பநிலை காரணமாக கிராம்ப் மற்றும் தசைப்பிடிப்புகளால் மிகவும் அவதியுற்றார். இந்த நாள் சில நேரங்களில் அவரால் ரன் எடுக்க கூட முடியவில்லை. மேலும் தனது அணிக்காக உயிரை கொடுத்து போராடி ஆஸ்திரேலியா அணியை அரை இறுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்தப் போட்டி தொடர்பாக அவரது மனைவி விணி ராமன் உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் மும்பை வான்கடை மைதானத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் அவர் 100 ரன்கள் என முதலில் பதிவிட்டு அதனை அடித்து விட்டு 201 ரன்கள் என்று பதிவு செய்து ஹார்ட் இமோஜி மற்றும் சோகமான சில இமோஜிகளை இருக்கிறார். அவை ஆடுகளத்தில் மேக்ஸ்வெல் பட்ட கஷ்டங்களை நினைவுபடுத்துவது போல் அமைந்திருக்கிறது. இதற்குப் பல ரசிகர்களும் தங்களது ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இவரது மனைவி சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சேர்ந்த பார்மசிஸ்ட் விணி ராமன் ஆஸ்திரேலியாவின் மெல்போனில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்கள் மூலம் மேக்ஸ்வெல் அறிமுகமானார். இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் 2022 மார்ச் மாதம் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு கடந்த செப்டம்பர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு லோகன் மேவ்ரிக் மேக்ஸ்வெல் என்று பெயர் சூட்டி இருக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மேக்ஸ்வெல் எடுக்கும் இரண்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் எடுத்து உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 201 ரங்கள் எடுத்திருப்பதன் மூலம் இரண்டாவது பேட்டிங்கில் இரட்டை சதம் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் லோயர் மிடில் ஆர்டரில் களம் இறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற கபில்தேவின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.