“எங்களுக்கு ஒரு ஐபிஎல் கப் ஜெயிச்சு கொடுங்க” – ஆர்சிபி ரசிகருக்கு தோனி இன்ட்ரஸ்டிங் பதில்!

0
2019
Dhoni

ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் ஆதரவு மற்றும் சந்தை மதிப்பில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேஞ்சஸ் பெங்களூரு அணிகள் மூன்று அணிகள் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.

இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளும் தலா ஐந்து முறை என மொத்தம் பத்து ஐபிஎல் தொடர்களை சமமாக வென்று இருக்கின்றன.

- Advertisement -

ஆனால் இவர்களுக்கு சமமாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரையில் ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதே கிடையாது. அதே சமயத்தில் பெரிய அணிகளுக்கு எதிரான ரசிகர்களின் ஆதரவு மற்றும் சந்தை மதிப்பு அவர்களுக்கு எப்போதும் இருந்து வருகிறது.

நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனியிடம் பலரும் பல கேள்விகளை முன் வைத்தார்கள். அதில் ஆர்சிபி ரசிகர் ஒருவர் மகேந்திர சிங் தோனிக்கு சுவாரசியமான ஒரு கோரிக்கையை முன் வைத்தார்.

அந்த ஆர்சிபி ரசிகர் பேசும் பொழுது “நான் 16 ஆண்டுகளாக ஆர்சிபி அணியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறேன். நீங்கள் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றது போல, எங்களுக்கு ஆதரவாக வந்து, எங்களுக்கு ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!” என்று கூறினார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்து பேசிய மகேந்திர சிங் தோனி “உங்களுக்கே தெரியும் ஆர்சிபி ஒரு நல்ல அணி. கிரிக்கெட்டில் எப்பொழுதும் நாம் திட்டமிட்டபடி எல்லாமே நடக்காது. நீங்கள் ஐபிஎல் தொடரை பற்றி பேசினால், எல்லா 10 அணிகளுக்கும் அவர்களுடைய எல்லா வீரர்களும் இருந்தால், எல்லா அணிகளுமே பலமான அணிகள்தான்.

காயம் போன்ற சில காரணங்களால் சில வீரர்களை நீங்கள் இழக்கும் போது சிக்கல் உருவாகிறது. இந்த வகையில் ஆர்சிபி எப்பொழுதும் ஒரு நல்ல அணி. ஐபிஎல் தொடரில் வெல்வதற்கு எல்லோருக்குமே வாய்ப்பு இருக்கிறது.

இப்போதைக்கு என் அணி உட்பட நான் கவலைப்படுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. எனவே ஒவ்வொரு அணியும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் தற்போது உங்களுக்கு இதைவிட வேறு எதையும் நான் செய்ய முடியாது.

ஏனென்றால் நீங்களே கற்பனை செய்து பாருங்கள், நான் சிஎஸ்கே அணியை விட்டு வெளியே வருவதோ, வேறு சில அணிகளுக்கு ஆதரவளிக்க அல்லது உதவ முயற்சி செய்தால், எங்கள் ரசிகர்கள் அதை எப்படி உணர்வார்கள்?” என்று எதார்த்தத்தை எடுத்துக் கூறி சுவாரசியமாக பதில் அளித்து இருக்கிறார்!