“கில் கிளீன் LBW.. அந்த பந்து எப்படி மேல போகும்?” – டக்கெட் டிஆர்எஸ் பற்றி கேள்வி

0
276
Gill

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது.

நேற்று முதல் நாளில் இந்திய அணியின் இளம் வீரர் மூன்றாவதாக பேட்டிங் வரிசையில் வந்த சுப்மன் கில் நேற்று 11 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, இங்கிலாந்து அணியின் ஹார்ட்லி பந்தில் எல்பிடபிள்யு அப்பில் கேட்கப்பட்டது.

- Advertisement -

மிடில் ஸ்டெம்ப்பை காலில் வாங்கப்பட்ட அந்த பந்தை பார்த்த பொழுது கிளீன் எல்பிடபிள்யு என்பதாகவே எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் ரீப்ளேவில் பால் டிராக்கிங் முறையில், பந்து ஸ்டெம்பை தாக்காமல் மேலே சென்றது. கில் அவுட் இல்லை என்று கொடுக்கப்பட்டது.

இதை அப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இங்கிலாந்து அணிக்கு அது மூன்றாவது ரிவ்யூ ஆகும். இதன் மூலம் 13 வது ஓவரிலேயே அந்த அணி மூன்று ரிவ்யூகளையும் இழந்து விட்டது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் கூறும்பொழுது ” இந்த ஆடுகளத்தில் இன்னிங்ஸை துவங்குவது ட்ரிக்கியாக இருந்தது. கில் கிளீன் எல்பிடபிள்யூ என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் பந்து ஸ்டெம்பை தாக்காமல் பவுன்ஸ் ஆகி மேலே சென்றது. அது எப்படி என்று தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இதில் ஒரு சுவாரசிய விஷயமாக அஸ்வின் பந்துவீச்சில் டக்கெட் எல்பிடபிள்யு ஆகிய பொழுது அம்பயர் கேட்டதும் அவுட் கொடுத்தார். முதலில் பார்க்கும் பொழுது பந்து ஸ்டெம்ப்பை முழுதாக தாக்குவது போல தெரிந்தது. ஆனால் இங்கிலாந்து ரிவ்யூ செய்து பார்க்கும் பொழுது, பாதி பந்து மட்டுமே ஸ்டெம்பை தாக்கியது. பந்தில் பவுன்ஸ் அப்பொழுதே காணப்பட்டது.

இதில் டக்கெட் கில்லை விட உயரம் குறைவானவர். ஆனால் இருவருக்கும் ஒரே அளவில் பந்து காலில் பட்டது. உயரம் குறைவானவராக டக்கெட் இருந்ததால் பந்து ஸ்டெம்பை தாக்கி இருக்கிறது. இதே கில் உயரம் கொஞ்சம் அதிகமானவராக இருப்பதால் பந்து ஸ்டெம்பை தாண்டி பவுன்ஸ் ஆகி இருக்கிறது. இதில் விமர்சனம் வைப்பதற்கான இடமே இல்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிங்க : சோயப் மாலிக் BPL மேட்ச் பிக்சிங் சர்ச்சை.. அணி உரிமையாளர் வெளியிட்ட தகவல்

இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் முடிக்க, இந்திய அணி தற்பொழுது 400 ரன்கள் 7 விக்கெட் இழப்புக்கு எட்டுவதற்கு இருக்கிறது. இந்த போட்டியில் வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்புகளை இந்திய அணி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.