“கில் நீங்க இதை செய்தால் மட்டுமே டெஸ்ட் அணியில் இருக்க முடியும்” – கும்ப்ளே ஓபன் ஸ்பீச்

0
148
Gill

கடந்த வருடத்துக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் விருதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இளம் வீரர் சுப்மன் கில் சில தினங்களுக்கு முன்னால் வாங்கினார்.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் துவங்கும் வரையில் சுப்மன் கில் இந்திய அணியின் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக கருதப்பட்டார். உலகக்கோப்பையில் நிறைய சதங்கள் மற்றும் ரன்கள் அடிக்கக்கூடியவராக அவர் இருப்பார் என்றும் கணிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் உலகக் கோப்பைக்கு சில தினங்கள் இருந்த பொழுது அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனால் முதல் இரண்டு ஆட்டங்களை தவறவிட்டார். மேற்கொண்டு போட்டிகளை தவற விடாமல் மிகச் சீக்கிரமாக களத்திற்கு திரும்பி வந்தார். ஆனால் அவரால் நல்ல உடல் தகுதியோடு செயல்பட முடியவில்லை.

இந்த நிலையில் ஏற்கனவே அவரது சர்வதேச டி20 பேட்டிங் செயல்பாடு சுமாரான நிலையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவரது பேட்டிங் சரியான முறையில் அமையவில்லை. தற்போது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இது மட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 20 போட்டிகளில் 37 இன்னிங்ஸ் விளையாடி இருக்கும் அவர் 1080 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இதில் நான்கு அரை சதம் மற்றும் இரண்டு சதங்கள் அடக்கம். இவரது ரன் சராசரி மொத்தம் 30 ஆக மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

மேலும் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 36. இதில் இரண்டு ஒற்றை இலக்க எண்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். இன்றும் 66 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இவருக்கு பேட்டிங்கில் என்ன மாதிரியான பிரச்சனை இருக்கிறது என்பது குறித்து இந்திய லெஜன்ட் அனில் கும்ப்ளே பேசி இருக்கிறார்.

கில் பேட்டிங் தடுமாற்றம் பற்றி பேசிய கும்ப்ளே “அவரால் ஸ்ட்ரைக்கை சுழற்றி சிங்கிள் ரொட்டேட் செய்ய முடியவில்லை. இதனால் அவருக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதை அவர் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்தில் விளையாட விரும்பினால், இந்திய விக்கெட்டுகளில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தாக வேண்டும். இல்லையென்றால் சுழற் பந்துவீச்சாளர்கள் சிக்கல் ஏற்படுத்துவார்கள்.

நேற்று அவர் பேட்டிங் செய்ய வந்த பொழுது, கடைசி நேரம் என்கின்ற காரணத்தினால் அவர் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இன்று தொடர்ந்து ஆடிய பொழுதும் அவரால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க : 48 ஓவர் 529 ரன்.. 63 பவுண்டரிகள் 24 சிக்ஸர்கள்.. முச்சதம் அடித்த ஹைதராபாத் வீரர்.. ரஞ்சி டிராபி 2024

அவர் இன்று இதிலிருந்து ரிலீஸ் ஷாட்டுக்காக, பந்து திரும்புவதற்கு எதிர் திசையில் விளையாடி ஆட்டம் இழந்து விட்டார். இது நல்ல ஷாட் கிடையாது. ராகுல் டிராவிட் மற்றும் புஜாரா விளையாடிய இடத்தில் கில் விளையாட வேண்டும் என்றால் ரொட்டேட் செய்தாக வேண்டும். மேலும் அவர் சாஃப்ட் ஹேண்டிலும், மணிக்கட்டை பயன்படுத்தியும் பேட்டிங் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இதை அவர் தனது ஆட்டத்தில் சேர்த்தால்தான் தப்பிக்க முடியும்” எனக் கூறியிருக்கிறார்.