இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்டை வென்ற பொழுது, இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறை குறித்து விமர்சனங்கள் அப்படியே அமுங்கி இருந்தது.
தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து தோற்றதும், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ் அணுகுமுறை குறித்தான விமர்சனங்கள் மீண்டும் என ஆரம்பித்துவிட்டது.
நடந்து முடிந்திருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் நான்கு இன்னிங்ஸ்களில் இரண்டு முறை ஒற்றை இலக்கத்தில் வெளியேறி இருக்கிறார். இதில் 29 ரன்கள்தான் அதிகபட்சமாக இருக்கிறது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டை பும்ரா இதுவரையில் எட்டு முறை வேண்டி இருக்கிறார். இந்தத் தொடரில் இரண்டு முறை இது நடந்திருக்கிறது. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு முறை இந்த தொடரில் ஜோ ரூட்டை வெளியேற்றி இருக்கிறார்.
தற்போது உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பெறுவதற்கான சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கக்கூடிய ஜோ ரூட், இங்கிலாந்து பாஸ்பால் அணுகுமுறையால் தன்னுடைய பேட்டிங் தரத்தை இழக்கிறார் என்கின்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இது குறித்து இங்கிலாந்து லெஜெண்ட் பாய்காட் கூறும் பொழுது “பாஸ்பால் ஆட்டமுறையால் ஜோ ரூட் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அவர் உள்ளே வந்தவுடன் பந்தை மேலே அடிக்க முயற்சி செய்தார். பந்தை காற்றில் அடித்து 16 ரன்களில் வெளியேறினார்.
இங்கிலாந்தின் அருமையான தொழில்நுட்ப ரீதியான பேட்ஸ்மேன் ஜோ ரூட். அவர் வழக்கமாகவே எப்பொழுதும் பிஸியாக இருக்கக்கூடிய வீரர். நல்ல முறையில் ரன் எடுக்கக் கூடியவர்.
‘எந்த இலக்கையும் நாங்கள் துரத்துவோம், இந்த அணியில் அலைஸ்டர் குக் விளையாட முடியாது’ என்று பென் ஸ்டோக்ஸ் பேசுவது பொதுமக்களுக்கு நன்றாகவும், எங்கள் ஊடகங்களுக்கு நல்ல செய்தியாகவும் இருக்கிறது. ஆனால் இது முட்டாள்தனமானது.
இதையும் படிங்க : “ஒரே ஒருத்தர் தோல்வியை கொடுத்துட்டார்.. இந்த இந்திய வீரர் மேதை” – நாசர் ஹுசைன் பாராட்டு
இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு நேரமும் இருக்கிறது. ஆனால் அவர்கள் தற்போது குக்கை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் கிடையாது. நிச்சயம் குக்குக்கு இங்கிலாந்து அணியில் இடம் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்னை விட பெரிய விஷயம் எதுவும் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.