“ஒரே ஒருத்தர் தோல்வியை கொடுத்துட்டார்.. இந்த இந்திய வீரர் மேதை” – நாசர் ஹுசைன் பாராட்டு

0
220
Hussain

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்காலிகமாக தொடரை சமன் செய்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இரண்டாவது பட்ச அதிக ஸ்கோர் ஆக 34 ரன்கள் மட்டும்தான் பதிவாகியது. ஜெய் ஸ்வால் நின்று விளையாடி இரட்டை சதம் அடித்து 209 ரன்கள் எடுக்கவில்லை என்றால், ஏறக்குறைய போட்டியில் இருந்து இந்தியா வெளியேறி இருக்கும்.

- Advertisement -

அதேபோல பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் இல்லாமல் சென்ற பொழுது, இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 45 ரன்கள் தட்டையான ஆடுகளத்தில் 6 இங்கிலாந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, 253 ரன்களுக்கு இங்கிலாந்தை மடக்க உதவினார்.

இல்லையென்றால் இந்தியா எடுத்த 396 ரன்கள் என்கின்ற மொத்தத்தையும் தாண்டி இங்கிலாந்து அணியால் எளிதாக பேட்டிங் செய்கின்ற ஆடுகளத்தில் சென்று இருக்க முடியும். இதன் காரணமாக இந்திய அணியால் 399 என்கின்ற இலக்கை நிர்ணயித்திருக்க முடியாது.

எனவே பும்ரா பந்துவீச்சுதான் இந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியதாக முதலிடத்தில் இருக்கிறது. இந்த காரணத்தினால்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆயத்த நாயகன் விருதை பும்ராவுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

உம்ரா பற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் கூறும் பொழுது “இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. இரண்டு புத்திசாலித்தனமான பெரிய அணிகள் ஒருவருக்கொருவர் விட்டுத் தராமல் மோதிக்கொண்டார்கள். இங்கிலாந்து தங்களுடைய வழக்கமான வழியில் சென்றது.

ஆனால் இங்கிலாந்து நேற்றைய நாளில் மிகவும் தடுமாறியது. இதற்கு பும்ரா வீசிய ஒரு குறிப்பிட்ட ஸ்பெல்தான். பேட்டிங் செய்ய சாதகமான தட்டையான ஆடுகளத்தில், 45 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்பது மிகப்பெரிய விஷயம்.

பும்ராவின் மேஜிக் ஸ்பெல்தான் இங்கிலாந்தை 250 ரன்கள் கட்டுப்படுத்தியது. மேலும் அவர் வீசிய அந்த ஒரு ஸ்பெல்தான் இரண்டு அணிகளுக்கும் வித்தியாசமான ஒன்றாகவும் இருந்தது.

இதையும் படிங்க : “மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி வருவாரா? மாட்டாரா?” – ராகுல் டிராவிட் பதில்

உங்கள் அணி தோற்கும் பொழுது சில நேரங்களில் நீங்கள் உங்கள் அணியை விமர்சனம் செய்வீர்கள். அதே போல் சில நேரங்களில் உங்கள் அணி தோற்கும் பொழுது ‘ ஒரு மேதையால் தோற்கடிக்கப்பட்டு விட்டோம்’ என்று கூறுவீர்கள். இங்கிலாந்து பும்ரா என்ற மேதையால் தோற்கடிக்கப்பட்டு விட்டார்” என்று கூறியிருக்கிறார்.