“இது டி20 கிரிக்கெட் போட்டி இல்லை” ….. இந்தியா அணியினர் செய்து கொள்ள வேண்டிய டெக்னிகல் மாற்றங்கள் குறித்து எச்சரித்த சுனில் கவாஸ்கர்!

0
303

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திப்பதற்காக இங்கிலாந்து சென்று இருக்கிறது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி வருகின்ற ஏழாம் தேதி ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .

கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்ற நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கைப்பற்றியது இந்திய அணி . தற்போது ஆஸ்திரேலியா அணியை இங்கிலாந்து மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது

- Advertisement -

பொதுவாகவே இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் இறுதிப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் ஒத்துழைக்கும் . இதனால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது .

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெறாதது அணிக்கு சற்று பின்னடைவாகவே உள்ளது . எனினும் விராட் கோலி மற்றும் புஜாரா போன்ற வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான விஷயங்களாகும் . இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் .

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” அதிக அளவு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிவிட்டு இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய வீரர்கள் தங்களது மட்டையின் வேகத்தில் சிறிது மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார் . டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை மட்டையை வேகமாக சுழற்ற வேண்டும் . பந்துகள் அதிகமாக நகரக்கூடிய இங்கிலாந்து ஆடுகளங்களில் மட்டையின் வேகத்தை சற்று நிதானப்படுத்தி விதமாக சுழற்ற வேண்டும் என அவர் அறிவுரை கூறியுள்ளார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இங்கிலாந்து ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும் . மேலும் அங்கு பயன்படுத்தப்படும் டியூக் பந்தும் அதிகமாக ஸ்விங் ஆகும் . நல்ல பேட்டிங் ஆடுகங்களில் ஆடி விட்டு சென்ற இந்திய அணிக்கு இது சற்று கடினமானதாக இருக்கும் ஆடுகளத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானமாக ஆட வேண்டும் என்று கூறியிருக்கிறார் .

மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஸ்விங் கிடைக்கும் போது ஃபுல் லென்த் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் . இது டி20 போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இடையே அவர்கள் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் எனவும் தெரிவித்திருக்கிறார் . இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி ஒரு சில பயிற்சி ஆட்டங்கள் ஆடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறி முடித்தார் சுனில் கவாஸ்கர் .