“சர்ப்ராஸ் நீ இப்படி பண்ணாத.. பிராட்மேன் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?” – கவாஸ்கர் விமர்சனம்

0
348
Sarfaraz

இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் கோட்டை விட்டு 218 ரன்களில் சுருண்டு ஏமாற்றம் அளித்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரும் சதம் அடிக்க, ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் மூவரும் அரை சதம் அடித்தார்கள். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த சூழ்நிலையில், அரைசதம் அடித்த இந்த மூவருமே சதத்தை தவற விட்டார்கள் என்று சொல்லலாம்.

இன்றைய போட்டியில் மிகவும் மெதுவாக ஆரம்பித்த சர்பராஸ் கான் அடுத்து சுழல் பந்துவீச்சு வேத பந்துவீச்சு என இரண்டையும் சேர்த்து அதிரடியான முறையில் வெளுத்து வாங்கினார். தேநீர் இடைவேளையின் போது அவர் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 60 ரன்கள் எடுத்து வெளியே சென்றார்.

இதற்கு அடுத்து தேநீர் இடைவேளை முடிந்து கடைசி சீசன் உள்ளே வந்த சர்பராஸ் கான் சோயப் பஷீர் பந்துவீச்சின் முதல் பந்திலையே லேட் கட் அடிக்கப் போய் ஆட்டம் இழந்தார். அந்தப் பந்து அப்படியான ஷாட் விளையாடுவதற்கான லெந்தில் விழவில்லை. உள்ளே வந்து நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக ரன்களை நோக்கி சர்ப்ராஸ் கான் போய் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

இது இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கரை மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சர்பராஸ் கான் விளையாடிய விதம் குறித்தும், டான் பிராட்மேன் தன்னிடம் ஒவ்வொரு பந்தையும் எப்படி விளையாடுவதாக கூறினார் என்றும் உதாரணம் சொல்லி கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது “இன்று தேநீர் இடைவேளை முடிந்து மீண்டும் பேட்டிங் செய்ய வந்த சர்பராஸ் கான் ஷாட் விளையாடுவதற்கான லென்த்தில் இல்லாத பந்தில் தேவையில்லாமல் அவசரப்பட்டு ஆடி விக்கெட்டை விலையாக கொடுத்தார். அவர் இன்று உள்ளே வந்து முதல் பந்திலேயே இப்படி ஆடினார். கொஞ்சமாவது நேரம் கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : “நான் பேட்டிங் பண்ண உள்ள போனப்ப.. டிராவிட் சார் ஒன்னு சொன்னார்.. அதுதான் உதவுச்சி” – தேவ்தத் படிக்கல் பேட்டி

என்னிடம் ஒருமுறை டான் பிராட்மேன் கூறும்பொழுது ” நான் 200 ரன்கள் அடித்து காலத்தில் இருந்தாலும் கூட, ஒவ்வொரு பந்தையும் நான் ரன்கள் எடுக்கவில்லை பூஜ்ஜியத்தில் இருக்கிறேன் என்பதாகத்தான் விளையாடுவேன்” என்று கூறியிருந்தார். இப்படி விளையாடாமல் தான் சர்ப்ராஸ் கான் விக்கெட்டை இழந்தார்” என்று கூறியிருக்கிறார்