“மும்பை கிடையாது.. 2024 ஐபிஎல்-ல் இந்த டீம் உறுதியா பிளே-ஆப் போகுது” – கவாஸ்கர் கணிப்பு

0
139
CSK

தற்பொழுது இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்தத் தொடர் மார்ச் மாதம் மத்தியில் சரியாக முடிவடைகிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் 17 வது ஐபிஎல் சீசன் மார்ச் மாதத்தின் முடிவில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மார்ச் மாதத்தில் இறுதியில் ஆரம்பிக்கும் ஐபிஎல் தொடர், வழக்கம்போல் மே மாதத்தின் இறுதியில் முடிவடையும். இந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்று முடிவுக்கு வந்தது.

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு தேவையான எல்லா இடங்களுக்கும் வீரர்களை மிக எளிமையாக வாங்கி இருக்கிறது. மேலும் மும்பை வான்கடே மைதானம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான சிவப்பு மண் மைதானம் ஆகும்.

இதன் காரணமாக தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவதற்கு சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கி மும்பை இந்தியன்ஸ் அணி வைத்திருக்கிறது. எனவே இந்த அணி மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

ஆனால் லெஜன்ட் சுனில் கவாஸ்கருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை விட இன்னொரு அணி மேல்தான் மிகவும் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு வருவார்கள் என்று நம்புகிறார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி செயல்பட்ட விதம், அவர்கள் தேவையை அவர்கள் பூர்த்தி செய்த விதத்தில் பார்க்கும் பொழுது, கடந்த ஆண்டு அம்பதி ராயுடு ஓய்வு பெற்றதால், அவருடைய இடத்தை நிரப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். மேலும் இளமை மற்றும் அனுபவம் என சரிசமமான கலவையை கொண்டிருக்கிறார்கள்.

எனவே சிஎஸ்கே எப்படியும் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து ப்ளே ஆப் சுற்றை எட்டும் என்று எதிர்பார்க்கிறேன். எந்த அணியையும் உறுதியாக இப்படி சொல்ல முடியாது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல ஆண்டுகளாக செயல்பட்ட விதத்தில் இப்படி கூறலாம். அவர்கள் 16 ஆண்டுகளில் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள். 13 வது முறையாக அது நடக்கும்.

இதையும் படிங்க : “பும்ராவுக்கு இந்த விஷயம் கடவுள் தந்த பரிசு.. 1970 ஆஸி லெஜெண்ட் மாதிரி அவர்” – தமிழக வீரர் பாலாஜி பேச்சு

அவர்களுடைய வேகப் பந்துவீச்சாளர்கள் காயமடைந்திருந்தாலும் அது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்காது. தீபக் சகர் இடத்தை சர்துல் தாக்கூர் நிரப்பி விடுவார். மேலும் துசார் தேஷ்பாண்டே நல்ல உடல் தகுதி கொண்டவர். முகேஷ் சவுத்ரி புதிய பந்தில் இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைத்து விடுவார்” என்று கூறியிருக்கிறார்.