இந்த பிளேயிங் லெவனோட போங்க… டெஸ்ட் சாம்பியன்ஷிப் நமக்கு தான்! – பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த சுனில் கவாஸ்கர்!

0
1544

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் களமிறங்கும் இந்திய அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு முன்னணி இந்திய வீரர்கள் நேரடியாக இங்கிலாந்திற்கு சென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பைனலில் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது.

- Advertisement -

வருகிற ஜூன் ஏழாம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் டெஸ்ட் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன.

2013 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி ஐசிசி நடத்தும் கோப்பைகளை வெல்லவில்லை. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை நியூசிலாந்து அணியிடம் இழந்தது. இம்முறை ஐசிசி கோப்பைகள் வறட்சியை தீர்க்க வேண்டும் மற்றும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதிதீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

15 பேர் கொண்ட இந்த இந்திய அணியில் இங்கிலாந்து கண்டிஷனுக்கு ஏற்ப எந்த 11 பேர் கொண்ட பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து, தனது பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

- Advertisement -

கவாஸ்கர் தனது அணியில் ஓப்பனிங்கில் சுப்மன் கில் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி சித்தேஸ்வரர் புஜாரா, நான்காவது இடத்தில் விராட் கோலி மற்றும் ஐந்தாவது இடத்தில் அஜிங்கியா ரகானே தேர்வு செய்து டாப் ஆர்டர்களை அறிவித்தார்.

ஆறாவது இடத்தில் இசான் கிஷன் அல்லது கேஎஸ் பரத் இருவருக்கும் இடையே யார் இடம் பெறுவார் என்று குழப்பம் நிலவியது. இதில் கேஎஸ் பரத் சரியாக இருப்பார் என கவாஸ்கர் எடுத்துள்ளார். பரத் தான் பார்டர்-கவாஸ்கர் தொடரில் அனைத்து போட்டிகளிலும் கீப்பிங் செய்தார். ஆகையால் இங்கும் அவர் தொடர்வது தான் சரியாக இருக்கும் என்று எடுத்துள்ளார்.

அதற்கு அடுத்த இடத்தில் சர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ஆல் கவுண்டர்கள் இடத்தில் தேர்வு செய்துள்ளார். கடைசியாக முகமது சமி மற்றும் முகமது சிராஜ் இருவரையும் வேகப்பந்து வீச்சில் எடுத்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.