“ஜடேஜா கெஞ்சுகிறார்.. கேப்டனா பொறுப்பா நடங்க ரோகித்” – கவாஸ்கர் விமர்சனம்

0
260
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகள் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

தற்பொழுது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான தரமான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் சாதகங்களும் அதே சமயத்தில் சவால்களும் இருக்கின்றன. இதன் காரணமாக ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட் பார்க்க கிடைத்திருக்கிறது.

தற்பொழுது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் எட்டாவது விக்கட்டுக்கு ஜோ ரூட் மற்றும் ராபின்சன் இருவரும் இணைந்து 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவிற்கு தலைவலியை உருவாக்கி இருக்கிறார்கள்.

நேற்றைய நாளில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ராபின்சன் கிளீன் எல்பிடபிள்யு ஆனார். நடுவர் இதற்கு அவர் தரவில்லை. ஆனால் இந்திய அணியால் ரிவ்யூ செல்ல முடியவில்லை. காரணம் அவர்கள் கையில் இருந்த மூன்று ரிவ்யூகளையும் இழந்து விட்டனர். இதன் காரணமாக ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைந்து இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக அமைந்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் டிஆர்எஸ் விஷயத்தில் ரோஹித் சர்மா கேப்டனாக என்ன செய்ய வேண்டும் என்று பேசி உள்ள கவாஸ்கர் “ஜடேஜா உணர்வுபூர்வமாக விக்கெட் வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மாவிடம் கெஞ்சுகிறார். ஆனால் நீங்கள் ஒரு கேப்டனாக அவரிடம் செல்ல முடியுமா முடியாதா என்பதை கூற வேண்டும். ஆனால் அவர் கேட்கிறார் என்பதற்காக போகக்கூடாது. ஏனென்றால் நம்மிடம் ஒரு ரிவ்யூ இருந்தது ஆனால் இங்கிலாந்து இடம் மூன்று இருந்தது.

இதையும் படிங்க : 245 to 347.. கடைசியில் ராபின்சன் தொந்தரவு.. ஜடேஜா இங்கிலாந்து இன்னிங்ஸ்க்கு முடிவு கட்டினார்

இழந்த ரிவியூக்களில் ரோகித் சர்மாவுக்கு நல்ல ரெபெரென்ஸ் இல்லை. ரோகித் சர்மா அதில் ஆர்வம் காட்டவும் இல்லை. ஆனால் பந்துவீச்சாளர்களால் அவர் கட்டாயப்படுத்தப்பட்டது போல இருந்தார். ஒரு விக்கட்டுக்காக பந்துவீச்சாளர்கள் உற்சாகமடைந்து இப்படியெல்லாம் கேட்க செய்வார்கள். ஆனால் கேப்டன் அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.