அந்த லீஸ்ட் பாருங்க..! கோலியை தவிர யாருக்காவது அந்த ஸ்பெசாலிட்டு இருக்கா? கம்பீர் பாராட்டு

0
940

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைமுக தாக்குதலில் ஈடுபட்ட கௌதம் கம்பீர் தற்போது அவரை வெகுவாக பாராட்டி உள்ளார். தனிமனித பாராட்டுதலை ஊக்கப்படுத்தாதீர்கள் என்று கம்பீர் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆனால் திடீரென்று அவரே விராட் கோலிக்கு பாராட்டுகளை மாலையாக சுட்டிருக்கிறார்.

- Advertisement -

டெல்லி டெஸ்ட் போட்டியில் கடினமான கடைசி இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில் விராட் கோலி 31 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 25 ஆயிரம் ரன்களை கடந்த ஆறாவது இந்திய வீரர் மற்றும் அதிவேகமாக கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், அந்த பட்டியலில் இருக்கும் மற்ற வீரர்கள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் விராட் கோலியின் சிறந்த விஷயமே அவர் இந்தியாவில் எவ்வளவு சிறப்பாக விளையாடிகிறாரோ, அதேபோலத்தான் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் செயல்படுகிறார் என பாராட்டியுள்ளார்.

அந்தப் பட்டியலில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் இல்லை மற்ற வீரர்களை நீங்கள் எடுத்துக்கொண்டு பாருங்கள். அவர்களை ஒப்பிட்டு பார்த்தால் சொந்த மண்ணில் எப்படி விளையாடியிருக்கிறார்கள்? ஆசிய கண்டத்தில் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்று பார்த்தாலே உங்களுக்கு புரியும்.எனவே விராட் கோலியின் சிறப்பு அம்சமே அவர் அனைத்து விதமான கிரிக்கெட் சூழலிலும் எப்படி இவ்வளவு வேகமாக அடித்திருக்கிறார் என்பதுதான் என்று கம்பீர் கூறியுள்ளார்.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ரிக்கி பாண்டிங் போன்ற பேட்ஸ்மேன்கள் இந்திய ஆடுகளத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் கம்பீர் இப்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய கம்பீர் 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு எக்ஸ்பர்ட் என்று எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதேபோன்று திறமை வாய்ந்தவர் தான் விராட் கோலி. அவர் 27 சதம்,28 அரைசதம் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய வெளிநாட்டு மண்களிலும் சதம் அடித்திருக்கிறார். இதைவிட வெகு பெரிய சாதனை வேறு என்னவாக இருக்க முடியும்.

- Advertisement -

25 ஆயிரம் ரன்கள் என்றால் அது அவர் தொடர்ந்து எவ்வளவு நீண்ட காலம் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பதை காட்டுகிறது. இதில் ஏற்றமும் இறக்கமும் இல்லை நீங்கள் தொடர்ந்து ரன்குவித்து வந்தால் உங்களுடைய ஆட்டமும் மெருகேறும். உங்களுடைய கிரிக்கெட்டின் பலம், பலவீனம் அனைத்துமே மாறும்.
இது எல்லாத்தையும் கட்டுக்கோப்பில் வைத்து ரன்கள் அடிப்பதெல்லாம் சிறந்த வீரர்களால் மட்டுமே முடியும் என்று கம்பீர் பாராட்டியுள்ளார்.