கம்பீர் – கோலி சண்டையில் பேசி கொண்டது இது தான்.. வெளியான பரபரப்பான தகவல்!

0
2003

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோ அணி வீரர்களும் பெங்களூர் அணி வீரர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் விராட் கோலியும் , கௌதம் கம்பீரும் தங்களுக்குள் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.

இதன் காரணமாக இருவருக்கும் தங்கள் போட்டியின் ஊதியத்திலிருந்து 100% அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மோதலில் யார் மீது தவறு எதற்காக பிரச்சனை எழுந்தது என்பது குறித்து ரசிகர்களிடையே பல விவாதம் எழுந்தது. இதில் மேயர்ஸ், விராட் கோலியிடம் பேசியது பிடிக்கவில்லை எனக் கூறி கம்பீர் அவரை அழைத்துச் சென்று விட்டதாக ரசிகர்கள் தவறாக நினைத்தனர்.

- Advertisement -

ஆனால் உண்மையில் விராட் கோலியும், மேயர்ஸூம் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இதை பார்த்த கௌதம் கம்பீர், மேயர்சை அழைத்துச் சென்றார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது கோலியும், கம்பீரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற தகவல் தற்போது வெளியாக இருக்கிறது.

இதில் விராட் கோலி திட்டியவுடன் கம்பீர் அவரிடம் இப்போது நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் என கோபமாக கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி நான் உங்களை எதுவும் சொல்லவில்லை நீங்கள் ஏன் நடுவில் வருகிறீர்கள் என பதில் அளித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கம்பீர்,  நீ என் அணி வீரர்களை திட்டினால் அது என் குடும்பத்தை திட்டியதற்கு சமம் என்று  கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, அப்படி என்றால் உங்கள் குடும்பத்தை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலியின் இந்த பதிலால் கடுப்பான கௌதம் கம்பீர் குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டுமா என கம்பீர் கோபமாக பேசி உள்ளார். அதற்குள் சக அணி வீரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.

இந்த பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில் தற்போது லக்னோ அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் இன்று மாலை 3:30 மணிக்கு மோதுகிறது.  இதில் கம்பீருக்கு பிடிக்காத தோனி விளையாடுகிறார். அடுத்தடுத்து இரண்டு பிடிக்காத வீரர்களுடன் கம்பீர் விளையாடுவது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.