“கம்பீர் விராட் கோலிக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்க வேண்டும்” – பாகிஸ்தான் வீரர் பரபரப்பு பேச்சு!

0
942
Gambhir

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானத்தில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நடைபெற்ற விரும்பத்தகாதச் சம்பவங்கள் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது!

முதலில் களத்தில் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீனுக்கும் இடையே உருவான பிரச்சனை போட்டி முடிந்ததும் விராட் கோலிக்கும் கம்பீருக்குமான பிரச்சனையாக மாறியது.

- Advertisement -

இதையடுத்து இரு அணி வீரர்களும் தலையிட்டு இந்தப் பிரச்சனையை அப்பொழுது முடித்து வைத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகும் சமூக வலைதளத்தில் இவர்களது பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

தற்பொழுது இது குறித்து பாகிஸ்தான் வீரர் அகமது சேஷாத் கூறும் பொழுது
“பாருங்கள் நீங்கள் கேட்பதால் நான் சொல்கிறேன். நான் பார்த்த வரையில் கம்பீர் செய்தது தான் தவறு என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய உன்னதத்தை காட்ட வேண்டும் என்றால் அவர் விராட் கோலியை போனில் அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

கம்பீர் இதைச் செய்தால், அவர் எவ்வளவு பெரிய மனிதர்? அவர் எவ்வளவு பெரிய பெருந்தன்மையோடு விராட் கோலிக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருதை பகிர்ந்து வழங்கினார்? அவர் அவரை எவ்வளவு நேசிக்கிறார்? என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ள முடியும்.

- Advertisement -

கம்பீர் தன் முழு வாழ்க்கையில் செய்து பெற்ற மரியாதையை விட மிக அதிகமாக விராட் கோலி மரியாதையைப் பெற்று இருக்கிறார். இதை கம்பீரால் ஜீரணிக்க முடியவில்லை. விராட் கோலிக்கு சிறிய வயதில் இவ்வளவு பெரிய மரியாதை கிடைத்தது அவரால் தாங்க முடியவில்லை.

இதே இடத்தில் விராட் கோலிக்கு பதிலாக சச்சின் இருந்திருந்தால் கம்பீர் இப்படி செய்திருப்பாரா? நீங்கள் 75 சதங்களைப் பெரிதாக நினைக்காமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் விராட் கோலியை ராஜாவாக கருதுகிறோம். நாங்கள் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறோம், மதம் மற்றும் எதையும் பார்க்காமல் நாங்கள் கிரிக்கெட் திறமையை மட்டும் மதிக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்.