வீடியோ : நேற்றைய வெற்றிக்குப் பின் கம்பீர் செய்த காரியம் …… இவ்வளவு அனுபவ வீரராக இருந்து கொண்டு கம்பீர் இப்படி செய்யலாமா !

0
413

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னவாணிகள் மோதின . இந்தப் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது .

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது இதனைத் தொடர்ந்து ஆடிய லக்னோ அணி நிக்கோலாஸ் பூரன் மற்றும் மண்காட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19.2 ஓவர்களில் ஏழு விக்கெட் கீகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

- Advertisement -

சிறப்பாக ஆடிய மண்காட் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு போண்டரிகளுடன் 45 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் . இறுதி நேரத்தில் வந்து அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் விளக்காமல் இருந்தார் .

நேற்றைய வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது லக்னோ . இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதம் இருக்கும் நிலையில் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது . நேற்றைய போட்டியின் போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றன .

ஆவேஷ் கான் வீசிய 19 வது ஓவரில் நோ பால் ஒன்று மூன்றாவது நடுவரால் வழங்கப்படவில்லை . இதனால் ஆத்திரமடைந்த ஹைதராபாத் அணி ரசிகர்கள் லக்னோ அணியின் வீரர்கள் டக் அவுட்டில் நட் மற்றும் போல்ட்களை வீசினர் . இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது . பின்னர் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரைச் சொல்லி கூச்சலிட்டனர் . இதனால் லக்னா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் மிகுந்த கோபத்தில் இருந்தார் .

- Advertisement -

லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது விராட் கோலி மற்றும் கம்பியினுடைய முதல் மிகப்பெரிய சர்ச்சையானது . நேற்றைய போட்டி முடிந்ததும் லக்னவாணியின் ஆலோசகர் கம்பீர் தனது அணி வீரர்களிடம் வெற்றியை கொண்டாடி ஹைதராபாத் அணியினரின் முகத்தில் கரியை பூசுமாறு சைகை செய்தார் . அந்தக் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .