2 இடங்களில் சொந்த செலவில் சூனியம்.. 2023 உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் 9 போட்டிகளின் அட்டவணை!

0
714
Odiwc2023

இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பைக்கான முழு அட்டவணையும் சற்று நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த உலகக்கோப்பையில் மொத்தம் பத்து அணிகள் பங்கு பெற ஒவ்வொரு அணியும் மற்ற அணிக்கு எதிராக தலா ஒரு போட்டியில் மோத இருக்கின்றன. அணிக்கும் தலா ஒன்பது போட்டிகள் லீக் சுற்றில் இருக்கின்றன.

- Advertisement -

இந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறுகின்றன. அதற்கு அடுத்து இறுதிப் போட்டி அதிலிருந்து வெல்லும் அணிகளைக் கொண்டு நடத்தப்பட்டு சாம்பியன் அணி முடிவாகிறது.

வருகின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துவங்கி, இதே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்தியா லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளில் 9 அணிகளுக்கு எதிராக எங்கெங்கு விளையாட இருக்கிறது என்கின்ற முழு அட்டவணையையும் கீழே நாம் பார்ப்போம்.

- Advertisement -

அக்டோபர் 8 ஆஸ்திரேலியா சென்னை
அக்டோபர் 11 ஆப்கானிஸ்தான் டெல்லி
அக்டோபர் 15 பாகிஸ்தான் அகமதாபாத்
அக்டோபர் 19 பங்களாதேஷ் புனே
அக்டோபர் 22 நியூசிலாந்து தர்மசாலா
அக்டோபர் 29 இங்கிலாந்து லக்னோ
நவம்பர் 2 குவாலிபயர் 2 மும்பை
நவம்பர் 5 சவுத் ஆப்பிரிக்கா கொல்கத்தா
நவம்பர் 11 குவாலிபயர் 1 பெங்களூர்

கடந்த முறை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோதிய ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியில் ஆடம் ஜாம்பா மற்றும் ஆஸ்டன் ஆகர் என்று மிகத் திறமையான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இதேபோல் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா மைதானம் பந்து ஸ்விங் ஆவதற்கு மிகவும் ஏற்ற சூழ்நிலையை கொண்டுள்ள இடமாகும். இந்த மைதானத்தில் ஸ்விங் வேகப்பந்து வீச்சில் சிறந்த அணியான நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவது இந்திய அணிக்குப் பின்னடைவுதான்.

எனவே இந்த இரண்டு இடங்களிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகளுடன் விளையாடி இருக்கலாம். போட்டியை நடத்தும் இந்தியா அந்த மாதிரி எந்த காரியங்களிலும் ஈடுபடாமல், மிக நேர்மையாகவே அட்டவணையைத் தயாரித்து இருக்கிறது!