தற்போது மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாகூருக்கு இடமில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் தோனிஸ் மற்றும் ரோஹித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன்? என்கின்ற கேள்விக்கு அவர் வித்தியாசமான பதில் ஒன்றை தந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது பேட்டிங் செய்யக்கூடிய நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெற்றார்.
இந்த நிலையில் கடந்தாண்டு இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிகளிலும் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் கடந்த வருடம் பந்துவீச்சு மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் மும்பை அணிக்கு ரஞ்சி டிராபியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இத்தோடு சேர்த்து இந்த வருடம் ஐபிஎல் தொடருக்கு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். தன்னுடைய பழைய கேப்டன் மகேந்திர சிங் தோனி உடன் மீண்டும் இணைந்தார். அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையிலும் அவர் முடிந்த வரையில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தோனி மற்றும் ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் யார் என்று கூறுகையில் “முதலில் எனக்கு ரோகித் சர்மா நண்பன். எனவே நான் சிறந்த கேப்டனாக தோனியை தேர்ந்தெடுக்கிறேன். நான் ரோகித் சர்மாவிடம் சென்று எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியும். இந்த வீடியோவை அவர் பார்த்தாலும் கூட விரும்பவே செய்வார். மேலும் ரோகித் சர்மா கோபத்தில் இருந்தால் கூட நம்மை புரிந்து கொள்வார். இப்பொழுதும் கூட அவர் தொலைபேசியில் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இலங்கை வீரர் கணிப்பு சரியானது.. வெஸ்ட் இண்டீஸ்க்கு செக் வைத்த கேசவ் மகாராஜ்.. தென் ஆப்பிரிக்கா முன்னிலை
இதில் சர்துல் தாகூர் ரோகித் சர்மா தன்னுடைய நண்பனாக இருக்கின்ற காரணத்தினால் சிறந்த கேப்டனாக சொல்லாவிட்டாலும் கூட அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்றும், அதனால் தோனியை தான் தேர்வு செய்கிறேன் என்றும் சாமர்த்தியமாக பதில் சொல்லியிருக்கிறார். அதே சமயத்தில் எல்லா வீரர்களிடமும் ரோகித் ஒரே மாதிரி நடந்து கொள்வது குறித்தும் கூறியிருக்கிறார். இந்த சிக்கலான கேள்விக்கு இப்படியான பதிலை லார்ட் சர்துல் மட்டுமே சொல்ல முடியும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள்!