5 விக்கெட்ஸ் அள்ளிய அஸ்வின்.. 150 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்! – அதிக 5 விக்கெட்ஸ், 700+ சர்வதேச விக்கெட்ஸ் ரெக்கார்டு மேல் ரெக்கார்டுகளை படைத்த அஸ்வின்!

0
1599

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது 33வது ஐந்து விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று மாலை இந்திய நேரப்படி ஏழு முப்பது மணி அளவில் துவங்கியது.

- Advertisement -

முதலில் பவுலிங் செய்து துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, உணவு இடைவேளைக்கு முன்பு 68 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்துவந்த ஆலிக் அத்தனஸ் 47 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்தார். பின்னர் வந்தவர்கள் எவரும் நிலைத்து நிற்கவில்லை. ஹோல்டர் 18 ரன்கள், கான்வெல் 19* ரன்கள் அடித்திருந்தனர்.

இறுதியாக 150 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆனது. அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தன்னுடைய 33ஆவது 5- விக்கெட்ஸை கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

- Advertisement -

இப்போட்டியில் அஸ்வின் படைத்த சாதனை பட்டியலை பின்வருமாறு காண்போம்!

  1. அதிக போல்டு செய்த இந்திய பந்துவீச்சாளர்!

முதல் இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டை போல்ட் செய்து எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 95வது முறையாக போல்டு செய்து விக்கெட்டை எடுத்திருக்கிறார். இதற்கு முந்தைய அதிகபட்சமாக 94 முறை போல்டு செய்து விக்கெடுகளை எடுத்த அணில் கும்ப்ளே சாதனையை முறியடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் 66 முறை போல்டு செய்துள்ள முகமது சமி இருக்கிறார்.

2. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்டில் அதிக 5 விக்கெட்ஸ் ஹால்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் ஆறு முறை இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள மால்கம் மார்சல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின் ஐந்தாவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்னிங்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். பட்டியலில் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

3. 700+ சர்வதேச விக்கெட்டுகள்

முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை நிறைவு செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். மொத்தம் 702 விக்கெட்டுகளை தன்வசம் வைத்திருக்கிறார். இந்திய வீரர்கள் மத்தியில் இது மூன்றாவது அதிகபட்சமாக இருக்கிறது. முதல் இடத்தில் 956 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே, இரண்டாவது இடத்தில் 711 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் இருக்கின்றனர்.

4. 33ஆவது முறையாக 5-விக்கெட்ஸ் ஹால்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 33ஆவது முறையாக 5 விக்கெட்களை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் மற்றும் இவருக்கு முன்பு இருக்கும் ஐந்து இடங்களிலும் ஸ்பின்னர்களளே இருக்கின்றனர்.

  • முத்தையா முரளிதரன் – 67 முறை
  • ஷேன் வார்ன் – 37 முறை
  • ரிச்சர்ட் ஹாட்லீ – 36 முறை
  • அனில் கும்ப்ளே – 35 முறை
  • ரங்கன ஹேரத் – 34 முறை
  • ரவிச்சந்திரன் அஸ்வின் – 33 முறை