70/1இல் இருந்த பங்களாதேஷ் 160க்கு ஆல் அவுட்.. சிஎஸ்கே வீரரின் 5 விக்கெட்ஸ் உதவியால்… கெத்தாக பைனலுக்குள் நுழைந்த இந்தியா ஏ!

0
2970

வலுவான துவக்கம் பெற்ற பங்களாதேஷ் ஏ அணியை எமர்ஜிங் ஆசியகோப்பை அரையிறுதியில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி பைனலுக்கு முன்னேறியது. பைனலில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.

எமர்ஜிங் ஆசியக்கோப்பை அரையிறுதியின் இரண்டாவது போட்டியில் இந்தியா ஏ மற்றும் பங்களாதேஷ் ஏ இரு அணிகளும் மோதின. இப்போட்டியில் இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் இறங்கியது.

- Advertisement -

துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் முதல் விக்கெட்டிற்கு 29 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதில் சாய் சுதர்சன் 21 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த அபிஷேக் ஷர்மா 34 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் வரிசையாக சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

கேப்டன் யாஷ் துல் மட்டுமே ஒரு முனையில் நின்று நம்பிக்கையை அளிக்கும் விதமாக விளையாடி வந்தார். இவரும் 85 பந்துகளில் 66 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கடைசியில் மணவ் சுதர் 21 ரன்கள், ராஜ்வர்தன் 15 ரன்கள் அடித்துக் கொடுக்க, 49.1 ஓவரில் 211 ரன்கள் மட்டுமே அடித்து இந்தியா ஏ அணி ஆல் அவுட் ஆனது.

இலக்கை துரத்திய வங்கதேசம் ஏ அணி துவக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் தன்ஷித் ஹசன் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடியின் விக்கெட்டை உடைத்தார். மனவ் சுதர் முகமது நைம் 38 ரன்களுக்கு அவுட் ஆனார்.

- Advertisement -

மற்றொரு துவக்க வீரர் தன்ஷித் ஹசன் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 51 ரன்கள் அடித்து அவுட் ஆனார். துவக்க வீரர்கள் இருவரும் இப்படி அபாரமான துவக்கம் அமைத்துக் கொடுத்ததை கண்டு இந்திய அணி இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது இதிலிருந்து மீண்டு வருவது கடினம் என்று பலரும் கருதினர்.

அதன் பிறகு பவுலிங் செய்ய வந்த சிஎஸ்கே வீரர் நிஷாந்த் சிந்து வரிசையாக விக்கெடுகளை வீழ்த்தி மிகப்பெரிய நம்பிக்கையை பெற்றுக் கொடுத்தார். இவர் 8 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மற்றொரு சுழல்பந்து வீச்சாளர் மனவ் சுதர் 8.2 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அபிஷேக் சர்மா தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களை தவிர மிடில் ஆர்டரில் அதிகபட்சமாக சைஃப் ஹசன் 22 ரன்கள், முகமதுல் ஹசன் 20 ரன்கள் அடித்துக் கொடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு அவுட் ஆகினர். 34.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆன வங்கதேசம் ஏ அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் எமர்ஜிங் ஆசிய கோப்பையில் பைனல் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா ஏ அணி. வருகிற ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ள பைனலில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது