சிஎஸ்கே ஐபிஎல் 2024-ல் ஒருவேளை பென் ஸ்டோக்சை கழற்றி விட்டால்  வாங்க வாய்ப்புள்ள நான்கு வீரர்கள்

0
2167

நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது சிஎஸ்கே அணி வெற்றி பெறும் ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும். இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி.

இதன் மூலம் மும்பை அணியை கோப்பைகள் பட்டியலில் சமன் செய்தது சிஎஸ்கே. சர்வதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களைக் கொண்டு சிஎஸ்கே அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே அணி நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அவரது ஆட்டம் இந்த வருட ஐபிஎல்-இல் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 15 ரன்கள் எடுத்ததோடு ஒரு ஓவர் பந்து வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பிறகு காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இதனால் வர இருக்கின்ற ஐபிஎல் போட்டி தொடரில் அவரை விலக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ஒருவேளை சிஎஸ்கே அணி பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து நீக்கினால் அவருக்கு பதிலாக தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கும் நான்கு வீரர்களை பற்றி பார்ப்போம்.

ஜேம்ஸ் நீஷாம்;
நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ஜேம்ஸ் நீஷாம் டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான பேட்ஸ்மேன் மற்றும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு பந்துவீச்சாளர். இவர் உலகம் முழுவதும் உள்ள டி20 லீக் போட்டிகளில் ஆடி வருகிறார். நடந்து முடிந்த இரண்டு டி20 உலக கோப்பை போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்கு முக்கியமான ஆட்டக்காரராக விளங்கினார் இவர் ஐபிஎல் தொடர்களில் மூன்று முறை விளையாடி இருக்கிறார். இரண்டு முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் ஒருமுறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார். 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 61 ரன்களை எடுத்ததோடு எட்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்

டேரில் மிட்ச்சல்;
நியூசிலாந்து அணியின் மற்றொரு ஆல் ரவுண்டர் டேரில் மிட்ச்சல். சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல பார்வையில் இருக்கக்கூடிய ஒரு ஆல்ரவுண்டர். நியூசிலாந்து அணிக்காக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாடியவர். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்கவில்லை. 52 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 1040 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் ஆல் கவுண்டர் ஸ்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாக இருப்பார்.

- Advertisement -

முகமது அமீர்:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆன முகமது அமீர் இங்கிலாந்தின் குடியுரிமைக்காக விண்ணப்பித்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு அவருக்கு குடியுரிமை கிடைக்க பெற்று பிரிட்டிஷ் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் அவர் 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெறலாம் . பிராவோவிற்கு பிறகு ஒரு சிறந்த வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் சிஎஸ்கே அணியில் இடம் பெறவில்லை. இதனால் சிஎஸ்கே அணி முகமது அமீரை ஏலத்தில் எடுத்தால் அந்த அணியின் பந்துவீச்சு மேலும் வலுப்படும்.

டிராவஸ் ஹெட்:
ஆஸ்திரேலியா அணியின் டிராவஸ் ஹெட் சிஎஸ்கே அணிக்கு நல்ல ஒரு பேட்டிங் தேர்வாக இருக்கும். மேலும் இவர் ஆப் ஸ்பின் வீசக்கூடியவர். 2016-17 ஐபிஎல் தொடர்களில் விளையாடிய ஹெட் பத்துப் போட்டிகளில் விளையாடி 25 ரன்கள் எடுத்திருக்கிறார். சராசரி 29.3 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 138.5. இவர் ஒரு சிறந்த பினிஷர் ஆகவும் விளையாடக் கூடியவர்.