இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது.
கோப்பையை வெற்றி பெற இரண்டு நாடுகளும் தீவிரமான பயிற்சியில் பங்கேற்று வரும் நிலையில் இது குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெயின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எனவே இந்த இரண்டு அணிகளும் மோதும் கடைசி மற்றும் இறுதிப் போட்டி நாளை குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே நடப்புச் சாம்பியன் ஆக இருக்கும் இந்திய அணி இந்த முறையும் உலகக்கோப்பையை கைப்பற்றுவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளை நியூசிலாந்து அணியும் வலுவாக இருப்பதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க, மிகவும் சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டைன் இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறவில்லை என்றால் சோக்கர்ஸ் இனி நாங்கள் கிடையாது நியூசிலாந்து அணி தான் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “எல்லோரும் எங்கள் தென்னாப்பிரிக்க அணியை சோக்கர்ஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையாக பார்த்தால் எங்களை விட நியூசிலாந்து அணி அதிக இறுதிப் போட்டிகளில் பங்கேற்று கோப்பைகளை வெல்லவில்லை. எனவே நியூசிலாந்து அணி இந்த உலக கோப்பையை நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.
அப்படி இல்லை என்றால் நான் இனி உங்களைத்தான் சோக்கர்ஸ் என்று அழைப்பேன். குறிப்பாக நியூசிலாந்து அணியால் இந்திய அணியை இந்த போட்டியில் வெல்ல முடியாது” என்று பேசி இருக்கிறார். எனவே நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் ஆகுமா? அல்லது நியூசிலாந்து அணி வெற்றி பெற்று புதிய சாம்பியன் ஆகுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.






