இந்திய கிரிக்கெட்

இந்திய அணி பந்தில் மோசடி செய்தே வென்றது.. இங்கி பந்தை லேபுக்கு அனுப்பனும் – பாக் முன்னாள் வீரர் பேச்சு

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்தில் மோசடி செய்து வென்றதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சபீர் அஹமத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி கடைசியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பந்தில் மோசடி செய்ததாக தற்பொழுது பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

குற்றச்சாட்டுக்கு காரணம் என்ன?

இந்திய அணி குறிப்பிட்ட இன்னிங்ஸில் 80 ஓவர்கள் பந்தை பயன்படுத்திய பிறகும் புதிய பந்தை எடுக்காமல் பழைய பந்திலேயே தொடர்ந்து பந்து வீசி வென்றது. குறிப்பிட்ட அந்த பழைய பந்து 80 ஓவர்கள் தாண்டிய பிறகும் கூட சிறப்பான முறையில் ஸ்விங் ஆனது.

இதன் காரணமாக இந்திய அணி தொடர்ந்து புதிய பந்தை எடுக்காமல் பழைய பந்தில் விளையாடியது. மேலும் பழைய பந்து ஸ்விங் ஆவதற்கு முக்கிய காரணமாக வானிலை கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தது. இதுவெல்லாம் சேர்ந்து இந்திய அணிக்கு கடைசிக் கட்டத்தில் நல்ல உதவி செய்தது.

- Advertisement -

சபீர் அஹமத் குற்றச்சாட்டு

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய உயரமான வேகப்பந்து வீச்சாளர் சபீர் அஹமத் இந்திய அணி பந்தில் வாஸ்லைன் பயன்படுத்தி பளபளப்பாகி மோசடி செய்து வென்றதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து 100 பந்து தொடர்.. எப்போது தொடங்குகிறது.. இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்? – முழு விவரங்கள்

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இந்தியா வாஸ்லைனை பயன்படுத்தியது என்று நினைக்கிறேன். 80 ஓவர்களுக்குப் பிறகும் அந்த பழைய பந்து பளபளப்பாக மின்னியது. மேலும் நடுவர்கள் இந்த பந்தை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by