இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் நூறு பந்து தொடருக்கான இந்த வருட அட்டவணை மற்றும் ஒளிபரப்பு விபரங்கள் வெளியாகியிருக்கிறது.
டி20 கிரிக்கெட்டில் இருந்து வித்தியாசமாக 100 பந்துகள் கொண்ட போட்டியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தி ஹன்ட்ரேடு கிரிக்கெட் தொடரை 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த தொடரின் ஐந்தாவது எடிசன் இந்த வருடம் துவங்க இருக்கிறது.
எப்போது தொடங்குகிறது?
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விட்டாலிட்டி ப்ளாஸ்ட் என்கின்ற பெயரில் ஐபிஎல் தொடர் போல டி20 தொடரை வருட வருடம் நடத்தி வருகிறது. அதே சமயத்தில் டி20 தொடரில் இருந்து வித்தியாசமாக 100 பந்துகள் வீசப்படும் தொடரையும் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்திக் கொண்டு வருகிறது. இதில் கேன் வில்லியம்சன், ஸ்மித் போன்ற வெளிநாட்டு வீரர்களும், புரூக் மற்றும் ரூட் போன்ற உள்நாட்டு வீரர்களும் விளையாடுகிறார்கள்.
இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெறுகின்றன. மேலும் இந்த எட்டு அணிகளுமே ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளை வைத்திருக்கின்றன. மேலும் ஒரே நேரத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100 பந்து தொடரை நடத்துகின்றன. இந்த வருடத்திற்கான தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் எப்படி பார்க்கலாம்?
இந்தத் தொடருக்கான முழு ஒளிபரப்பு உரிமையை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. எனவே இந்தியாவில் தடை இல்லாமல் இந்த சேனலில் பார்க்கலாம். இது மட்டும் இல்லாமல் பேன் கோடு அப்ளிகேஷனிலும் பார்க்கலாம்.
இதையும் படிங்க : விராட் ரோஹித்துக்கு பிசிசிஐ வைக்கும் அடுத்த செக்.. கில்லுக்கு மெகா அதிர்ஷ்டம் – கவலை அடையும் இந்திய ரசிகர்கள்
மகளிர் 100 பந்து தொடரின் போட்டிகளை இந்திய நேரப்படி மாலை 4, மாலை 7:15, மாலை 7:30 மணிக்கு பார்க்கலாம். மேலும் எலிமினேட்டர் போட்டிகளை மாலை 6:45 க்கு பார்க்கலாம். இதேபோல ஆண்கள் 100 பந்து தொடரை மாலை 7, மாலை 7:30, இரவு 1030, இரவு 11 மணிக்குப் பார்க்கலாம். இதேபோல் எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டியை இரவு 7 மணிக்கு பார்க்கலாம்.






