சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்.. நான் அந்த ஒரு விஷயத்தை அவமானமா நினைக்கிறேன்.. அன்புக்கு நன்றி – ஜோஸ் பட்லர் வருத்தம்

0
750
Buttler

ஜோஸ்பட்லர் தற்போது இங்கிலாந்து வெள்ளை பந்து அணிகளின் கேப்டனாக இருந்து வருகிறார். மேலும் அவர் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் முக்கிய வீரராக விளையாடுகிறார். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அவமானமாக உணர்வதாக அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

உலக டி20 பிரான்சிசைஸ் லீக்குகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் இருந்து வருகிறது. இதில் பங்குபெறும் ஆறு அணிகளையும் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி இருக்கும் இந்திய முதலாளிகள் வாங்கியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி துவங்கி பிப்ரவரி 8ம் தேதி வரையில் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தத் தொடரில் இங்கிலாந்து வெள்ளை பந்து அணிகளின் கேப்டன் ஜோஸ் பட்லர் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட முடியாது என வருத்தத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரையில் இந்தியா வருகிறது. மேலும் தற்போது இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டன் ஆன ஜோஸ் பட்டுல இருக்கு தொடர்ந்து தோல்விகள் கிடைப்பதால் கேப்டன் பொறுப்பில் அழுத்தம் நிறைய நிலவி வருகிறது. எனவே இங்கிலாந்து அணிக்காக சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஜோஸ் பட்லர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறும் பொழுது “பார்ல் ராயல்ஸ் ரசிகர்களுக்கு ஒரு செய்தி. நான் இந்த ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் விளையாடுவதற்கு வரமாட்டேன். இதுகுறித்து நான் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன். எனக்கு இங்கிலாந்து அணிக்காக சில ஆட்டங்கள் இருக்கிறது. என்னுடைய முழு கவனமும் அதிலேயே இருக்கும்.

இதையும் படிங்க : கடைசி போட்டி.. கம்பீர் எங்ககிட்ட இத சொல்லி இருக்கார்.. ஜெயிக்க பெரிய வாய்ப்பு.. வாஷிங்டன் சுந்தர் பேட்டி

நான் இந்த தொடருக்கு வர முடியாதது எனக்கு ஒரு அவமானமாக இருக்கிறது. எனக்கு இந்தத் தொடரின் மீதும் பார்ல் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் மீதும் நிறைய அன்பு இருக்கிறது. இந்த தொடரில் நான் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் மீண்டும் இந்த தொடருக்கு திரும்பி வந்து விளையாடுவேன்” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -