டி20 உலக கோப்பையில் அர்ஸ்தீப் சிங் பந்தை ஸ்விங் செய்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்திருந்தார். இந்திய பந்துவீச்சாளர் முகமது சமி இன்சமாமை விமர்சித்து பேசியிருந்த நிலையில் பாக் முன்னாள் வீரர் பாஸித் அலி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
டி20 உலக கோப்பையில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் போட்டியின் தொடக்கத்திலேயே பந்தை ஸ்விங் செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல்ஹக் தனது குற்றச்சாட்டை முன் வைத்தார். அதேபோல பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது காயத்தில் இருந்து குணமாகி வந்திருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி “இது போன்ற கார்ட்டூன் மாதிரியான வேலைகள் வேறு எங்காவது வேண்டுமானால் நடைபெறலாம்” என்று கூறியிருந்தார். அதாவது சமி அந்த செயல்பாடு குறித்து மட்டுமே பேசி இருந்தாரே தவிர இன்சமாமை விமர்சனம் செய்யவில்லை. ஆனால் பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி இன்சமாமை விமர்சித்திருப்பதாக முகமது சமிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இனி கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலையும் உருவாகலாம் என்று பேசியிருக்கிறார். இதுகுறித்து கூறும்பொழுது “இன்சமாமை அவ்வாறு கூறியிருப்பது சரியானது அல்ல. அவர் பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழி நடத்தி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். சமி அவர் குறித்து அந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க கூடாது. அது என்னை காயப்படுத்தி விட்டது” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இன்சமாம் தவறு ஏதேனும் செய்திருந்தால் மூத்த வீரர் என்ற முறையில் அதை நல்ல விதமாக வேறு வழியில் சொல்லலாம். அவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள் அப்படி செய்யவில்லை என்றால் வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்கள் நீங்கள் அழுக வேண்டிய சூழ்நிலை வரலாம். இனி இது போன்று செய்ய வேண்டாம். இது எனது தனிப்பட்ட கோரிக்கையாகும்.
இதையும் படிங்க:எனக்கு அந்த 3 பேர்ல 2 பேர் கட்டாயம் விளையாடனும்.. இந்த கிரிக்கெட் தொழில் இப்படிதான் – கம்பீர் வெளிப்படையான பேச்சு
எங்கும் கவனமாக இருங்கள். எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. நீங்கள் எப்போதும் அநாகரிகமான பதில்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். நான் அநாகரிமான வார்த்தையை தான் பயன்படுத்துகிறேன். ஆனால் நீங்கள் அநாகரிகமான மொழியை பயன்படுத்துகிறீர்கள்” என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.