இந்திய கிரிக்கெட் டீமின் சீஃப் செலெக்டராக இருக்கும் அஜித் அகர்கரின் காண்ட்ராக்ட் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இந்திய முன்னாள் பிளேயர் வசீம் ஜாஃபர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அஜித் அகர்கரின் காண்ட்ராக்ட் அக்டோபர் நான்காம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அகர்கர் தலைவராக இருந்த காலத்தில் இந்திய டீம் வைட் பால் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு பல முக்கியமான டிராபிகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து வசீம் ஜாஃபர் பேசும்போது “வேர்ல்ட் கப் தொடருக்குப் பிறகு நடந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டூர்களை தவிர்த்து பார்த்தால் வைட் பால் கிரிக்கெட்டில் நாம் சிறப்பாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறோம். இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா டீம் ஆதிக்கம் செலுத்தியதை இது நமக்கு நினைவூட்டுகிறது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் டெஸ்ட் போட்டிகள் குறித்து பேசும்போது “நம்மிடம் காட்டுவதற்கு டிராபிகள் உள்ளன ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக ஹோம் கண்டிஷனில் நமது ஆதிக்கம் கொஞ்சம் குறைந்துள்ளது. இது அனைவருக்கும் நடப்பதுதான், எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது. ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும், ஆனால் மொத்தத்தில் அவர் நல்ல வேலையைச் செய்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.