ஆஃப்கானிஸ்தான் டீமுக்கு எதிரான முதல் டி20 மேட்ச்சில் இந்திய டீம் வெற்றி பெற்றிருந்தாலும், டீமில் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை குறித்து இந்திய முன்னாள் பிளேயர் வசீம் ஜாஃபர் கவலை தெரிவித்து பேசி இருக்கிறார்.
இந்த மேட்ச்சில் இந்திய டீம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஈசியாக வின் பண்ணியது. அபிஷேக் சர்மா முப்பத்திரண்டு பாலில எண்பத்திரண்டு ரன் அடித்து அருமையாக ஃபினிஷ் செய்தார். இருப்பினும் பௌலிங்கில் சில சிக்கல்கள் இருந்தது.
முக்கியமாக ஹர்திக் பாண்டியா டீமில் இல்லாத நேரத்தில் ஐந்தாவது பௌலர் ஆப்சன் பெரிய பிரச்சனையாக மாறுகிறது. நிதிஷ் ரெட்டி மற்றும் சிவம் தூபே ஆகிய ஆல்ரவுண்டர்கள் இந்த மேட்ச்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர்.
இதுகுறித்து வசீம் ஜாஃபர் பேசும்போது “ஒரு விஷயம் கவலை அளிப்பதாக உள்ளது, அது ஐந்தாவது பௌலர் ஆப்சன் தான். நிதிஷ் ரெட்டி மற்றும் சிவம் தூபே இருவரும் அதிகமான ரன்களை கொடுத்துவிட்டனர். ஹர்திக் பாண்டியா விளையாடாத போது இது கண்டிப்பான பிரச்சனையாக இருக்கும். ஹர்திக் இல்லாத போது பிரச்சனை வருகிறது. அபிஷேக் சர்மாவை ட்ரை பண்ணினார்கள், அது நல்ல ஆப்சன். ஆனால் வேர்ல்ட் கப் தொடருக்கு தயார் ஆகும்போது ஐந்தாவது மற்றும் ஆறாவது பௌலர்களை இந்தியா கவனிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ஹர்திக் பற்றி பேசும்போது “ஒடிஐ வேர்ல்ட் கப் விஷயத்தில் ஹர்திக் முக்கிய ஃபேக்டர், அவர் இருப்பது ரொம்ப முக்கியம். சவுத் ஆப்ரிக்காவில் நடக்கும் வேர்ல்ட் கப்பில் அவர் மூன்றாவது அல்லது நான்காவது சீமராக இருக்கலாம். அதனால் ஹர்திக் ஃபிட்டாக இருப்பது ரொம்ப முக்கியம், ஏனென்றால் லைக் பார் லைக் ரீப்ளேஸ்மென்ட் நமக்கு இன்னமும் கிடைக்கவில்லை. சிவம் தூபே அல்லது நிதிஷ் ரெட்டியை விட ஹர்திக் பாண்டியா ஒரு லெவல் மேல இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.