ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 மேட்ச் தொடங்குவதற்கு முன்பு இந்திய டீமின் ஐந்தாவது பவுலிங் ஆப்ஷன் குறித்த தங்களின் கவலையை முன்னாள் சிஎஸ்கே பிளேயர் மோஹித் சர்மா மற்றும் முகமது கைஃப் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.
முதல் மேட்ச் ஜெயித்திருந்தாலும் இந்திய டீமில் ஒரு ஃபிக்ஸட் ஐந்தாவது பவுலர் இல்லாதது பெரிய வீக்னஸ் ஆக பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்க்க மேனேஜ்மென்ட் யோசிக்க வேண்டும்.
டெல்லி பிட்ச் சூழ்நிலைக்கு ஏற்ப வாஷிங்டன் சுந்தர் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் வரை சிறப்பாக பவுலிங் செய்யக்கூடிய நல்ல ஆப்ஷனாக இருப்பார். இருப்பினும் மேட்ச் ஜெயித்ததால் டீம் மேனேஜ்மென்ட் பெரிய சேஞ்சஸ் எதையும் செய்யாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து முன்னாள் பிளேயர் மோஹித் சர்மா பேசும்போது “இந்திய டீம் மேனேஜ்மென்ட் முன் ஒரு பெரிய கொஸ்டின் இருக்கிறது. ஐந்தாவது பவுலர் ஆப்ஷன் பற்றி மேனேஜ்மென்ட் யோசிக்குமா? ரவி பிஷ்னோய் அல்லது யாஷ் தாக்கூர் போன்ற ஒரு ஐந்தாவது பவுலர் தேவை என்று நினைப்பார்களா? அல்லது வாஷிங்டன் சுந்தரை டீமிற்குள் கொண்டு வருவார்களா? வாஷிங்டன் சுந்தர் இந்த டெல்லி விக்கெட்டில் இரண்டு முதல் மூன்று ஓவர்கள் வரை வீசக்கூடியவர்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “பும்ரா புது பாலில் பவுலிங் செய்தால் டெத் ஓவர்களில் பிரச்சனை வரும். அதனால் நிதிஷ் ரெட்டிக்கு பவர்ஃபிளேயில் புது பாலை கொடுத்து பும்ராவை டெத் ஓவர்களுக்கு சேவ் செய்ய வேண்டும், இதன் மூலம் சிவம் துபேவின் ஓவர் தவிர்க்கப்படும்” என்று கூறி முடித்துள்ளார்.